சித்த வைத்திய அகராதி 101 - 150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 101 - 150 மூலிகைச் சரக்குகள்


அங்காரி - வெங்காரம்
அங்காரி கைத்தட்டை - கரும்பு
அங்குசநீறு - பூநீறு
அங்குசநேமிச்செடி - கருந்துத்தி
அங்குசபாதிச்செடி - சிறுபுள்ளடி
அங்குசபிசாரி - கொள்ளு
அங்குசபோசகக் கொடி - கருந்தட்டைப் பயற்றுக்கொடி     
அங்குசமரம் - வாழைமரம்         
அங்குசமாதிதச்செடி - கருந்துவரைச்செடி       
அங்குசம் - காந்தம், பூநீறு       
அங்குசயோதனம் - கருந்தினை      
அங்குசரோசனி - கூகைநீறு            
அங்குசலாவிகம் - கருந்துத்தி      
அங்குசவிச்செடி - காணச்செடி      
அங்குசைத்தும்பைச்செடி - கருந்தும்பைச்செடி           
அங்குசோலி - அறுகு         
அங்குடாகினி - கருப்புக் கடுகு ரோகணி       
அங்குணம் - வெங்காரம்        
அங்குரி - விரல்                  
அங்கை - உள்ளங்கை         
அங்கோலமரம் - அழிஞ்சில்மரம்             
அங்கோலமாசகமரம் - கரும்புரசு      
அங்கோலவைரவ மரம் - அழிஞ்சில் மரம்    
அசகணாகமரம் - கருந்துவரை      
அசகண்டச்செடி - தைவேளை       
அசகாமிகக் கொடி - கருமொச்சைக்கொடி      
அசட்டி - அசமதாகம், ஓமம்       
அசப்பு - சடுதி, சீக்கிரம்               
அசமதாகம் - ஓமம்          
அசமநாகி - குரோசாணியோமம்      
அசமந்திரமரம் - மலையத்திமரம்     
அசமாருதமரம் - அத்திமரம்               
அசமேலிகச்செடி - கருப்பம்மான் பச்சரிசிச்செடி
அசமோதம் - ஓமம்
அசமோதாதிகச்செடி - கருப்பறுகுச்செடி     
அசம் - வெள்ளாடு         
அசம்பவம் - சூனியம்         
அசராதிமரம் - கொன்றைமரம்      
அசவாகிகம் - கருப்புக்கசகசா       
அசனபன்னி - சித்தகத்திமரம்
அசனபாணிகச்செடி - கருப்புப்பாவட்டைச்செடி
அசனப்பூடு - வெள்ளைப்பூடு
அசனவேதி - சீரகம்
அசனிமரம் - அணிச்சைமரம்
அசனோபத்தாரை மரம் - கருப்பு மந்தாரைமரம்
அசன்றிகாச்செடி - தைவேளைச்செடி
அசாகமரம் - அரசமரம்
அசாணிமூலிக்கொடி - உத்தமதாளிக்கொடி
அசிதகருணிச்செடி - கருப்புவழுதலைச் செடி
அசிதாம்புருகம் - நீலோற்பலப்பூ

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal