சித்த வைத்திய அகராதி 51 - 100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 51 - 100 மூலிகைச் சரக்குகள்


அக்கப்பாடு - மோசம்             
அக்கமுன்றி - கண்        
அக்கரச்செடி - வெள்ளருக்கு         
அக்கரரகம் - அக்கிராகாரம்           
அக்காரப்பட்டை - புளிமாபட்டை   
அக்காரமரம் - மாமரம்      
அக்கார மோனிக்கொடி - கருங்கோவைக்கொடி  
அக்காளப்புல் - தரகப்புல்      
அக்கிச்சாறு - கற்றாழைச்சாறு    
அக்கிடம் - வசம்பு              
அக்கிப்பூடு - கொடிமாப்பூடு      
அக்கிராகரம் - அக்கிராகாரம்            
அக்கிராகாரச்செடி - வன்னிக்காரச்செடி             
அக்கிலாங்கொடி - கருநாகதாளி    
அக்கிலு - நெருஞ்சில்கொடி           
அக்கினிக்கபம் - கடல்நுரை      
அக்கினிச்சிலக்கிழங்கு - கார்த்திகைக்கிழங்கு    
அக்கினிச்சிலாசக்செடி - கருங்கொடுவேலிச்செடி    
அக்கினிச்சிவச்செடி - குப்பைமேனிச்செடி   
அக்கினிச் சிவாகச்செடி - கொடுவேலிச்செடி    
அக்கினிச்செடி - செங்கொடிவேலிச்செடி      
அக்கினிச்சேவகக்கிழங்கு - கருநாவிக்கிழங்கு      
அக்கினித்திராவகம் - அனற்றிராவகம்      
அக்கினிமாந்தி - வாதமடக்கி       
அக்கினிமுகக்கொட்டை - சேங்கொட்டை     
அக்கினிமூலம் - சேங்கொட்டை
அக்குமணி - எட்டிக்கொட்டை
அக்குமரம் - எட்டிமரம்
அக்குரமரம் - அகில்மரம்
அக்குரோசக்கொடி - கருஞ்சீந்திற்கொடி
அக்கோடகக்காய் - கடுக்காய்
அக்கோடிகச்செடி - கருஞ்சூரை
அக்கோலமரம் - தேற்றாமரம்
அங்கசங்கம் - சேர்க்கை
அங்கசபிசாகச்செடி - கருநாயுருவிச்செடி
அங்கசூதமரம் - கொன்றைமரம்
அங்கணக்காய் - கடுக்காய்
அங்கயற்கண்ணிச்செடி - கற்பூரவல்லிச்செடி
அங்கமாதிப்பாஷாணம் - கெளரிபாஷாணம்
அங்கரமோதகிமரம் - கருநாரத்தைமரம்
அங்கரவல்லிச்செடி - குறிஞ்சாச்செடி
அங்கரூபகம் - மயிர், ரோமம்
அங்கலி - கொங்கை
அங்கன பாஷாணம் - அமிர்த பாஷாணம்
அங்கனி - கற்றாழை
அங்கனை - பெண்
அங்கனைக்கள்ளிச்செடி - ஐங்கணுக்கள்ளிச்செடி
அங்காரம் - தீ, நெருப்பு
அங்காரவல்லி - சிறுதேக்கு
அங்காரவாரிதிச்செடி - கருந்தகரைச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal