சித்த வைத்திய அகராதி 1601 - 1650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1601 - 1650 மூலிகைச் சரக்குகள்


இயைமேதைமரம் - வாழைபழம்
இரகசியாமக்கொடி - செங்கழுநீர்
இரங்கழிஞ்சில்மரம் - அழிஞ்சில்
இரசகாப்பாஷாணம் - சாதிலிங்கம்
இரசதம் - வெள்ளி
இரசதாகிக்காய் - கடுக்காய்
இரசதாளிமரம் - வாழைமரம்
இரசநாதச்செடி - குறிஞ்சா
இரசபலமரம் - தென்னை மரம்
இரசபாஷாணம் - வைப்புப் பாஷாணம்
இரசமரம் - மாமரம்
இரசம் - சூதம்
இரசலிங்கம் - சாதிலிங்கம்
இரசவாழைமரம் - பேயன்வாழை
இரசனாகிகம் - அரத்தை
இரசநாதிதம் - கசகசா    
இரசணிச்செடி - அவுரிச்செடி  
இரசனிச்சேவிதக்கொடி - கண்டங்கத்தரிக்கொடி  
இரசாலகச்செடி - தொட்டாற்சுருங்கிச்செடி       
இரஞ்சகத்தாமரை - ஓரிதழ்த்தாமரை         
இரஞ்சனம் - செஞ்சந்தனம் 
இரட்டைப்பேய்ப்பிரட்டி - பெரியகிலுகிலுப்பை 
இரணகோலகம் - தும்பைச்செடி
இரண்டினிச்செடி - இண்டுச்செடி
இரண்யகர்ப்பநீர் - குடநீர் 
இரதகமரம் - இத்திமரம்  
இரதகிகம் - உரம்    
இரதசந்தியாகக்கொடி - செந்தாமரைக்கொடி          
இரதமரம் - மாமரம்   
இரதவாழை - ரஸ்தாளிவாழை         
இரதிகாந்தன் - தாமரைக்கொடி
இரதகேதனக்கொட்டை - உருண்டைக்காப்பிக்கொட்டை
இரதிபுட்பம் - கார்த்திகைப்பூ     
இரதிமாதுச்செடி - வட்டக்கிலுகிலுப்பைச்செடி    
இரதிமாமரம் - இலந்தைமரம்  
இரத்தகாஞ்சினைச்செடி - ஆற்றலரிச்செடி 
இரத்தககனி - கொவ்வைக்கனி       
இரத்தக்கொய்யாமரம் - செங்கொய்யாமரம்           
இரத்தகோமாரிச்செடி - சிவப்பு செந்தொட்டிச்செடி           
இரத்தசந்தனம் - செஞ்சந்தனம் 
இரத்தசந்தியாகக்கொடி - செந்தாமரைக்கொடி  
இரத்தசாகத்தண்டு - செங்கீரை 
இரத்தசாரமரம் - கருங்காலிமரம்
இரத்தச்சிவதை - செஞ்சிவதை
இரத்தச்சேமி - நெருஞ்சில்
இரத்தபாஷாணம் - அரக்குப்பாஷாணம்
இரத்தபாதம் - கிளிமுருக்குமரம்
இரத்தபிண்டக்கொடி - காட்டுமல்லிகைக்கொடி
இரத்தபித்தச்செடி - ஆடாதோடைச்செடி
இரத்தபுட்பிகச்செடி - மூக்குறட்டைச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal