சித்த வைத்திய அகராதி 1801 - 1850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1801 - 1850 மூலிகைச் சரக்குகள்


இலட்சுமிசேர்க்கை - வன்னிமரம்
இலணைமரம் - அரசமரம்
இலண்டனாமணக்கு - சீமையாமணக்கு
இலண்டன்பருத்தி  -அமொpக்கன்பருத்தி
இலதுமுகிக்கொடி - கல்லுப்பயிற்றின்கொடி
இலதைமரம் - இலந்தைமரம்
இலதைவன்னிச்செடி - கொடிவேலிச்செடி
இலந்தைமரம் - போpலந்தைமரம்
இலபேதகிக்கொடி  - கழுநீர்ப்பூ
இலவங்கப்பட்டை - கிராம்புமரப்பட்டை
இலவங்கப்பண்ணிகம் - ஊறுகாய்
இலவங்கப்பத்திரி - கிராம்புயிலை
இலவங்கப்பாசிதச்செடி - எரிசாலைச்செடி
இலவங்கப்பூ - கிராம்பு
இலவஞ்சிக்கொடி - காட்டுச் சம்பங்கிக்கொடி
இலவணம் - உப்பு
இலவீதச்செடி - எருமைநாக்கி
இலவமரம் - இலவுமரம்
இலாங்கலமாதி - ஆண்குறி
இலாங்கலாக்கிழங்கு - வெந்தோன்றிக்கிழங்கு
இலாங்கலாதிதச்செடி - ஊசிமுல்லைச்செடி
இலாங்கலிக்கரந்தைச்செடி - கெங்கரந்தைச்செடி
இலாங்கலிக்கோசச்செடி - ஊமத்தைச்செடி
இலாங்கலிப்பூ - செங்காந்தட்பூ
இலாங்கலிப்போpகம் - சிவப்புகிலுகிலுப்பைச்செடி
இலாங்கலிமரம் - தெங்குமரம்
இலாஞ்சலிச்செடி - ஏலச்செடி
இலாடன்பருத்தி - மயிலான்பருத்தி
இலாதிக்கரும்புத்தட்டை - பேய்க்கரும்புத்தட்டை
இலாமிச்சை மரம் - எலுமிச்சை
இலாமிச்சை வேர் - வெட்டிவேர்
இலிகுசமரம் - இலவமரம்
இலிகேசக்கொடி - சவுரிக்கொடி
இலிங்கக்கோவை - ஐவிரலி
இலிங்கம் - சமாசக பாஷாணம்
இலுப்பைமரம் - போpலுப்பை
இலேகிணிச்செடி - மஞ்சள்செடி
இலேடீரியச்செடி - சீமைச்செடி
இலேதீதச்செடி - எரிபூடுச்செடி
இலேபம் - வாள்மிளகு
இலேபாகியம் - ஊணான்கொடி
இலேம்புகச்செடி - நிலக்கடம்பு
இலேம்போருகப்பூடு - பாம்புக்கொல்லிப்பூடு
இலைக்கள்ளிச்செடி - நானாங்கள்ளிச்செடி
இலைக்கற்றாழை - முட்கற்றாழை
இலைக்கொடி - வெற்றிலைக்கொடி
இலைநொச்சிச்செடி - கருநொச்சி
இலைப்பாசி - குழைப்பாசி
இலைப்பிரப்பாகற்கொடி - மிதிபாகற்கொடி
இலைப்புரசமரம் - சீனப்புரசமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal