சித்த வைத்திய அகராதி 1851 - 1900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1851 - 1900 மூலிகைச் சரக்குகள்


இலைமுலைமாதுக்கொடி - தூதுவளை
இல்லகமரம் - தேற்றாமரம்
இல்லடைப்புல் - முயற்புல்
இல்லிகக்கீரை - சிறுகீரை
இல்லிகம் - வால்மிளகு
இல்லிமரம் - தேற்றாமரம்
இல்லேகக்கொடி - முப்பிரண்டை
இவைநாகிதம் - மிளகு
இழுவைச்செடி - பூனைமுட்செடி
இளசாட்சகமரம் - கொன்றை
இளஞ்சாலவமரம் - சிவப்புசித்தகத்திமரம்
இளஞ்சிச்செடி - ஆவரைச்செடி
இளஞ்சிதச்செடி - ஊசிமுல்லை
இளஞ்சினிச்செடி - அவுரிச்செடி
இளஞ்சீவிதக்காய் - ஊறுகாய்
இளநீர்க்காய் - தெங்கிளநீர்க்காய்
இளந்தண்டுக்கீரை - முளைக்கீரை
இளந்தோகைச்செடி - சிவப்புப் பொன்னாங்கன்னிச்செடி
இளம்புல்லுறுகு - அறுகு
இளவந்திகை - சிறுகட்டுக்கொடி
இறஞ்சிச்செடி - அவுரிச்செடி
இறஞ்சிதச்சேம்புச்செடி - கருஞ்சேம்புச்செடி
இறந்திரிமரம் - இத்திமரம்
இறலாகிகச்செடி - எரிமூலிகை
இறலிமரம் - மருதுமரம்
இறுகண்ணியம் - கருடன்கொடி
இறுகாவகச்செடி - கையான் தகரைச்செடி
இறுகானகிச்செடி - கெளரியச்சஞ்செடி
இறுங்குச்சோளம் - காக்காய்ச் சோளம்
இறுசிகமரம் - எட்டி
இறுசுவசற்பாட்சி - சற்பாட்சி
இறுதாதிகக்கொடி - கேந்திரவல்லிக்கொடி
இறுநாகவேர் - இலாமிச்சைவேர்
இறுமாப்புக்கொடி - கும்பச்சுரை
இறும்புகக்கொடி - தாமரை
இறும்புகாப்பூ - கார்த்திகைப்பூ
இறும்புநீத்திச்செடி - எருக்கிலை
இறைகூத்தன்மரம் - குராமரம்
இறைமாமரம் - மாமரம்
இறையாமணக்கு - செவ்வாமணக்குச்செடி
இறைவனிம்பச்செடி - சிவனார்வேம்புச்செடி
இனிப்பிலந்தைமரம் - இலந்தை
இனிப்பிலாதிதமரம் - கமுகுமரம்
இனிப்புகொடிமாதளை - கொடிமாதளை
இனிப்புக்கொடி முங்கிகம் - கொடி நெல்லி
இனிப்புக்கொடிமுந்திரி - கொடி முந்திரி
இனிப்புத்தட்டை - இராமக்கரும்புத்தட்டை
இனிப்புநவ்வல்மரம் - நவ்வல்மரம்
இனிப்புநாகப்பழம் - நவ்வல்பழம்
இனிப்புநாரத்தைமரம் - கொடிநாரத்தை

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal