சித்த வைத்திய அகராதி 1901 - 1950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1901 - 1950 மூலிகைச் சரக்குகள்


இனிப்புப்பூசணி - மஞ்சட்பூசணி பழம்
இனிப்புமாதளை - மாதளைமரம்
இனிப்புமாதிரப்பழம் - கிஸ்மிஸ்பழம்
இனிப்புமாமரம் - மாமரம்
இனிப்புமீலிப்பழம் - கிச்கிலிபழம்
இனிப்புமுந்திரி - முந்திரிப்பழம்
இனிப்பூரிப்பழம் - ஆள்பகோடாப்பழம்
இனிப்பெலுமிச்சை - எலுமிச்சை
இன்சூரைச்செடி - இம்புராச்செடி
இன்புராலிக்கொடி - சிறுபுடல்
இன்புராவேர் - சாயவேர்
இன்னாலைக்கள்ளி - இலைக்கள்ளி
இன்னிக்கிலை - கம்மாறுவெற்றிலை
இன்னூகக்காய் - கப்பற்கடுக்காய்
ஈகவிமரம் - சந்தனமரம்
ஈகாரிகச்செடி - கீழகாய்நெல்லி
ஈகைக்கொடி - புலிதொடக்கி
ஈக்கணாதிகச்செடி - ஓரிலைத் தாமரைச்செடி
ஈக்கைக்கொடி - இண்டங்கொடி
ஈங்கமரம் - சந்தனமரம்
ஈங்கரச்செடி - குப்பைமேனி
ஈங்காவிதக்கிழங்கு - குண்டொசரிக்கிழங்கு
ஈங்குக்கொடி - புலிதொடக்கி
ஈங்கூகம் - குக்கில்
ஈங்கைக்கொடி - உப்பிலிக்கொடி
ஈங்கோபிதம் - குந்திரிக்கம்
ஈசதேசாத்திரிக்கொடி - பெருமருந்துக்கொடி
ஈசத்துவறுகு - சிற்றறுகு
ஈசனுப்பு - வெடியுப்பு
ஈசானிகமரம் - உடைமரம்
ஈசுரசுருளிக்கொடி - பெருமருந்து
ஈசுரவிந்து - ரசம்
ஈசுவரதரு - கடம்புமரம்
ஈச்சமரம் - போPச்சமரம்
ஈச்சமுது - ஈச்சங்கள்ளு
ஈஞ்சுச்செடி - சிற்றீஞ்சு
ஈஞ்சுடாகிமரம் - ஈச்சமரம்
ஈடனாசிகச்செடி - ஐந்திலைநொச்சி
ஈண்டுக்கொடி - ஈபத்தண்டு
ஈந்துப்போளம் - கரியபோளம்
ஈந்துமரம் - ஈச்சமரம்
ஈமந்தன் - மேலுதடு
ஈமமரம் - பாதிரிமரம்
ஈமம் - சுடுகாடு
ஈமவாரி - வசம்பு
ஈயக்காரிகைச்செடி - சுளுக்குநாயகக்செடி
ஈயக்கொடி - இண்டங்கொடி
ஈயங்காலிச்செடி - குத்துப்பிடாரி
ஈயங்கொல்லி - ரோசனம்
ஈயசோலிக்கொடி - வேலிபருத்திக்கொடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal