சித்த வைத்திய அகராதி 1951 - 2000 மூலிகைச் சரக்குகள்
ஈயத்தண்டுக்கொடி - இண்டு
ஈபத்தின்பிள்ளை - நீலபாஷாணம்
ஈயமரம் - பாதிரிமரம்
ஈயமூலிகைகள் - பொன்னாங்கண்ணி, சூரை, சீந்திற்கொடி, முத்தெருக்கஞ்செவி, வெள்ளறுகு, செருப்படி, சிறுபூளை, விழுகி, முசுட்டை, வெள்ளைச்சாரணி, உக்தாமணி ஆக 11
ஈயவரிக்கொடி - பெருமருந்து
ஈயவாரிகச்செடி - வெள்ளறுகு
ஈயை - இஞ்சி
ஈரங்காயம் - வெங்காயம்
ஈரத்கட்டை - ஈரக்குழற்கட்டை
ஈரத்திரையம் - குங்கிலியம்
ஈரப்பலாதிதச்செடி - குதிரைவாலிச்செடி
ஈரப்பலாமரம் - பச்சைப்பலா
ஈரமாப்பூ - குங்குமப்பூ
ஈரரத்தை - சிற்றரத்தை, பேராத்தை
ஈரலுக்கு வலுவைக் கொடுக்கு மூலிகைகள் - சாதிக்காய் , கோரைக்கிழங்கு, ஏலக்காய், மாதுளம்பழம்
ஈரவாலிபரிசி - குதிரைவாலியரிசி
ஈரவுள்ளி - ஈரவெங்காயம்
ஈரவூனிகச்செடி - குத்து வல்லாரைச்செடி
ஈரவெங்காயம் - ஈருள்ளிப்பூண்டு
ஈரளவேணி - சீர்காகோளி
ஈருவாதிக்கீரை - குப்பைக்கீரை
ஈருள்ளிப்பூடு - ஈரவெங்காயப்பூடு
ஈர்கொல்லிக்கொடி - உப்பிலி
ஈழக்கொல்லி - தாளகம்
ஈழத்தலரி - ஆற்றலரிச்செடி
ஈழத்திமரம் - கல்லத்திமரம்
ஈழத்துக்கள்ளி - ஆட்டாங்கள்ளி
ஈறுகஞ்சகிமரம் - செங்கொன்னை
ஈனத்தாமரை - குளிர்த்தாமரை
ஈனத்திக்கள்ளிமரம் - பாட்சானகள்ளிமரம்
ஈனவக்கிரக்கொடி - கொடிக்கள்ளி
ஈனாக்கத்திரிச்செடி - நித்தக்கத்தி
ஈனாமேகப்பூ - செம்பரத்தம்பூ
ஈன்மரம் - ஆச்சாமரம்
உகண்டச்செடி - கடலைச்செடி
உகவல்லிச்செடி - நாகமல்லிச்செடி
உகாந்தவரகு - கேழ்வரகு
உகாமரம் - உலாமரம்
உகாய்மரம் - உகாமரம்
உகாரம் - நாதம்
உகாரவனிதைச்செடி - செடிப்பூவாசஞ்செடி
உகாரவுப்பு - கல்லுப்பு
உகிரமரம் - உதிரவேங்கைமரம்
உகிர்ச்சாரிகை - மலைநாரத்தை
உகினமரம் - புளியமாமரம்
உக்கா - கஞ்சாபிடிக்குமசிலுமி
உக்கிரகந்தத்திரவியம் - உரம்
உக்கிரகந்தப்பூ - இலுப்பைப்பூ
உக்கிரகந்தமரம் - இலுப்பைமரம்
உக்கிரகந்தை - வசம்பு
சித்த வைத்திய அகராதி 1951 - 2000 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

