சித்த வைத்திய அகராதி 2051 - 2100 மூலிகைச் சரக்குகள்
உதகுமரம் - புங்குமரம்
உதக்கீரகம் - பெருஞ்சீரகம்
உதந்திமரம் - உடைமரம்
உதந்திமாகிதமரம் - கம்பளிமரம்
உதந்திமேற்புல்லுருவி - உடைமேற்புல்லுருவி
உதம்பரமரம் - அத்திமரம்
உதரகிரிமரம் - இரத்தவேங்கை
உதரப்பாலாடை - சித்திரப்பாலாடை
உதரப்பூலிகம் - கரணைக்கிழங்கு
உதரவணிதக்கொடி - கண்டங்கத்திரிக்கொடி
உதரவாணிமரம் - நாங்கில்மரம்
உதராவிமஞ்சள் - மரமஞ்சள்
உதரிக்கடலை - கருங்கடலை
உதரிமுறித்தான்செடி - விஷ்ணுகரந்தைச்செடி
உதகவன்பூண்டு - தீமுறிப்பூண்டு
உதாசனச்செடி - கொடுவேலி
உதரம்பரம் - செம்பு
உதிமரம் - ஒதியமரம்
உதியமரம் - ஒதியமரம்
உதிரபந்தமரம் - மாதளைமரம்
உதிரமுறிப்பான்செடி - விஷ்ணுகிராந்திச்செடி
உதிரவன்னிச்செடி - செங்கொடிவேலிச்செடி
உதிரவேங்கைமரம் - இரத்தவேங்கைமரம்
உதிரிதாங்கொடி - கட்டுக்கொடி
உதிரிமாரிமரம் - உதரமாரிமரம்
உதிரிமிண்டிக்காய் - சுரைக்காய்
உதிர்க்கிடாரிக்கிழங்கு - கருடன்கிழங்கு
உதிர்க்கோலகவெற்றிலை - கம்மாறுவெற்றிலை
உதிர்பன்னீர்மரம் - மாலையம்பூமரம்
உதிர்ப்பகமரம் - சவுக்குமரம்
உதிர்வேங்கைமரம் - இரத்தவேங்கைமரம்
உதீசமரம் - வெட்டிவேர்
உதும்ரகச்செடி - எருக்கு
உதும்பரசிதக்கிழங்கு - கொட்டிக்கிழங்கு
உதும்பரமரம் - செவ்வகத்திமரம்
உத்தமசத்துகபாஷானம் - அவுபலபாஷாணம்
உத்தமதாளிக்கொடி - வேலிப்பருத்திக்கொடி
உத்தமாதிப்பழம் - முந்திரிபழம்
உத்தமுந்திரி மரம் - கொட்டைமுந்திரிமரம்
உத்தம்பரவெண்ணெய் - கண்டில்வெண்ணெய்
உத்தம்பரிச்செடி - கொத்தமல்லி
உத்தம்பலமரம் - முந்திரிமரம்
உத்தரகாரிகைச்செடி - விழுதி
உத்தவாலிகக்கொடி - கண்டங்கத்திரிக்கொடி
உத்தாசிகச்செடி - கண்ணுப்பீழைச்செடி
உத்தாபலச்செடி - இசங்கு
உத்தரபீலிகம் - கஸ்தூரி
உத்தரமணிக்கொடி - வேலிப்பருத்திக்கொடி
உத்தாமதிக்காரை - பெருங்காரைமரம்
உத்தாலமரம் - நறுவிலிமரம்
சித்த வைத்திய அகராதி 2051 - 2100 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

