சித்த வைத்திய அகராதி 2101 - 2150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2101 - 2150 மூலிகைச் சரக்குகள்


உத்திரப்பூண்டு - சிவனார்வேம்பு
உத்திராபன்னிச்செடி - சணல்
உத்திரிகநாரிமரம் - கஸ்தூரிநாறி
உத்திரிச்செடி - பருத்திச்செடி
உந்திக்கொடி - கொப்பூழ்கொடி
உபகுஞ்சிகைச்செடி - ஏலச்செடி
உபகுஞ்சிதச்செடி - கஸ்தூரியரளிச்செடி
உபகுலியம் - திப்பிலி
உபகுலோசிகம் - கத்தைக்காம்பு
உபகுல்லம் - சுக்கு
உபகுல்லாவிசமரம் - கம்பளி மரம்
உபகுல்லிகம் - திப்பிலி
உபசமயக்கத்திரி - முட்கத்திரி
உபதாகமரம் - பனைமரம்
உபதேசிகைமரம் - பெருமுன்னை
உபரசம் - சேர்க்கைரசம்
உபரதம் - வெடியுப்பு
உபரதாமிரத்தட்டை - நாரைமரம்
உபராசதமரம் - சித்தகத்தி
உபராமயச்செடி - வெண்டை
உபலோத்திரம் - விளாம்பிசின்
உபவராகப்பிரண்டை - கரணைப்பிரண்டைச்செடி
உபவரிக்கொடி - சீந்திற்கொடி
உபவனக்காய் - கடுக்காய்
உபவனச்செடி - காஞ்சொறி
உபவரகசக்கொடி - பேய்த்தும்மட்டிக்கொடி
உபறியாவி - கோஷ்டம்
உபற்பவப்பூடு - பாம்புகொல்லி
உபோதகக்கொடி - பேய்ப்பசளை
உபோதமரம் - ஆவிமரம்
உப்பந்திராய் - கச்சாந்திராய்ப்பூடு
உப்பங்கோரைப்புல் - கைப்புக்கோரைப்புல்
உப்பம்பருத்தி - பருத்திச்செடி
உப்பரிகைமூலி - தேர்ப்பூண்டு
உப்புறுகு - கொடியறுகு
உப்பிதாங்குச்செடி - உப்பிலிக்கொடி
உப்பிலிகம் - கருஞ்சோளம்
உப்பிலிக்கொடி - உம்பிலாதிக்கொடி
உப்பினிக்கரி - தேக அழுக்கு
உப்பு - கஞ்சியுப்பு
உப்புக்கசடு - சவுட்டுப்பு
உப்புக்கட்டிக்கொடி - சிறுகட்டுக்கொடி
உப்புடாலிச்செடி - கடற்கொழுஞ்சிச்செடி
உப்புத்தாரகிச்செடி - ஆற்றுமுள்ளங்கிச்செடி
உமதகிச்செடி - சணற்செடி
உமதாவியம் - கருஞ்சீரகம்
உமரிச்செடி - உமரிச்செடி
உமரிதாமரம் - கருஞ்சித்தகத்தி
உமற்கடப்புல் - தருப்பைப்புல்
உமாதகிக்கரும்பு - இரஸ்தாளிக்கரும்பு


சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal