சித்த வைத்திய அகராதி 2151 - 2200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2151 - 2200 மூலிகைச் சரக்குகள்


உமாதகியச்கொடி - குன்றிமணி
உமாதகியரிசி - கருங்குரவை
உமாதசிச்செடி - சணற்செடி
உமாதாதகிச்செடி - மஞ்சட்செவ்வந்திச்செடி
உமியல் - வசம்பு
உமியல்தாரிக்கொடி - கருநெய்தற்கொடி
உமியல்நீர் - அமுதநீர்
உமிரிநீர் - அமிர்தநீர்
உமிழ்நீர் - வாய்நீர்
உமிழ்நேசழகமரம் - இரும்புளிமரம்
உமுரிச்செடி - உமரிச்செடி
உம்பராகம் - ஆத்தழமேற்புல்லுருவி
உம்பல்மரம் - குமிழ்மரம்
உம்பளிக்கொடி - ஆகாயவெள்ளரிக்கொடி
உயத்திகபாஷாணம் - வெள்ளைப்பாஷாணம்
உயந்திசச்செடி - ஆள்வாடைதட்டிச்செடி
உயர்வுக்கொடி - குன்றுமணி
உயர்வேகிமதம் - கல்மதம்
உயவைக்கொடி - காக்கணத்தி
உயவைப்பூலா - கருப்புப்பூலா
உயிர்காப்பாற்றுமூலி - சஞ்சீவி
உயிர்த்தவமரம் - இனிப்புமாமரம்
உயிர்விமரம் - வேங்கைமரம்
உயிர்வீகமரம் - இரத்தவேங்கை
உய்யக்கொண்டான்மரம் - கொய்யாமரம்
உரககன்னிச்செடி - நாகமல்லிகை
உரகக்கொடி - மல்லிகைக்கொடி
உரகச்சீரகம் - காட்டுச்சீரகம்
உரகமல்லிக்கொடி - நாகமல்லிகை
உரகவல்லிக்கொடி - வெற்றிலை
உரப்பங்காயம் - பெருங்காயம்
உரப்பவங்கச்செடி - உள்ளொட்டிச்செடி
உரம் - வெள்ளுரம்
உரலாகைச்செடி - கருவீழி
உரலாமணக்குச்செடி - கடலாமணக்குச்செடி
உரிணிச்செடி - கொத்தமல்லி
உரிதாகமரம் - ஊடசில்மரம்
உரித்திரமஞ்சள் - மரமஞ்சள்
உரிமைச்சடாமரம் - ஊழலாத்தி
உருக்குக்காரம் - வெங்காரம்
உருக்குமித்திரச்செடி - வெள்ளையாமணக்குச்செடி
உருசைதரும்பூ - கஞ்சியுப்பு
உருடகக்கிழங்கு - கருநாவி
உருண்டைகாப்பிக்கொட்டை - உருண்டைகோப்பிகொட்டை
உருண்டைப்பிரண்டை - கோப்பிரண்டை
உருத்திரசடைச்செடி - திருநீற்றுப்பச்சைச்செடி
உருத்திரம் - மஞ்சள்
உருத்திரவுப்பு - வெடியுப்பு
உருத்திரiவரிக்கடலை - கருப்புக் கடலை
உருத்திராட்சம் - உருத்திராக்கம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal