சித்த வைத்திய அகராதி 2201 - 2250 மூலிகைச் சரக்குகள்
உருத்திராணிக்கொடி - சத்திச்சாரணைக்கொடி
உருமரம் - எலுமிச்சைமரம்
உருமாறுமூலிச்செடி - தொட்டாற்சிணுங்கி
உருவாரக்கொடி - வெள்ளரி
உருவாரசநெய் - கலப்புநெய்
உருவாரசமரம் - வீழிமரம்
உருவாரியுப்பு - ஞாளியுப்பு
உருவிச்செடி - நாயுருவிச்செடி
உருவிரக்கமரம் - கஸ்தூரிநாறி
உருவைச்செடி - சூரஞ்செடி
உருளரிசி - கொத்தமல்லி
உருளிபாதத்தட்டை - கம்பம்புல்தட்டை
உருளைக்கிழங்கு - மூலக்கிழங்கு
உருளைநீர் - அண்டநீர்
உரோகிணி - கடுகுரோகிணி
உரோகிநேயச்செடி - கற்றுளசி
உரோசனமரம் - முள்ளிலவமரம்
உரோசனமூங்கில் - கல்மூங்கில்
உரோசனிக்கொடி - தாமரை
உரோசனிப்பாசி - கற்பாசி
உரோசனியம் - கடுகு
உரோசிகாரப்புல் - பேய்ப்புல்
உரோதனிமரம் - சிறுகாஞ்சொறி
உரோபந்திகைச்செடி - காசித்தும்பைச்செடி
உரோமக்கிழங்கு - வசம்பு
உரோமசக்கிரிமரம் - சவுக்குமரம்
உரோமவிருட்சம் - வேதைவேங்கைமரம்
உரோமிப்பூடு - மயிர்ச்சிகைப்பூடு
உலகங்காத்தான்செடி - ஆவிரி
உலகநாமிக்கொடி - கோழியாவரைக்கொடி
உலகுலாகம் - திப்பிலி
உலக்கைக்கனி - தென்னங்காய்
உலக்கைக்கிழங்கு - மெருகன்கிழங்கு
உலங்காரனைச்செடி - அவுரி
உலண்டங்கொல்லிச்செடி - புழுக்கொல்லிச்செடி
உலம்பேசச்செடி - காட்டுமுல்லை
உலராங்குலைச்செடி - காயாங்குலை
உலவைக்கொடி - ஒடாங்கொடி
உலவைச்சீவியச்செடி - கருவீழி
உலவைச்செடி - கிலுகிலுப்பை
உலவைநாசி - திப்பிலிமூலம்
உலாகுண பாஷாணம் - மனோசிலைப்பாஷாணம்
உலாகுதப்பட்டை - கருந்தும்பை
உலாங்கிலிப்புல் - காவட்டம்புல்
உலாங்குசக்காய் - கழற்சிக்காய்
உலாங்குச்செடி - கிலுகிலுப்பை
உலாங்குப்பாகல் - கொம்பன் பாகற்கொடி
உலாங்குப்புல் - காவட்டம்புல்
உலாங்குலிச்சீரகம் - பெருஞ்சீரகம்
உலாங்குவிப்புல் - காமாட்சிப்புல்
சித்த வைத்திய அகராதி 2201 - 2250 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

