சித்த வைத்திய அகராதி 2251 - 2300 மூலிகைச் சரக்குகள்
உலாத்திமரம் - ஊழலாத்திமரம்
உலாமாமரம் - கொழுமிச்சைமரம்
உலிமணிச்செடி - நாயுருவிச்செடி
உலுகத்தண்டுச்செடி - கீரைத்தண்டுச்செடி
உலுவச்செடி - வெந்தயச்செடி
உலுவாசகெந்திச்செடி - தைவேளைச்செடி
உலுவாசீரகம் - பெருஞ்சீரகம்
உலுவாவிகச்செடி - கரிவேப்பிலை
உலூகசமரம் - குங்கிலியமரம்
உலூகலப்பூ - குங்குமப்பூ
உலோசிக்கொடி - பேய்ப்பசளை
உலோசிதமரம் - சந்தனமரம்
உலோசிதம் - சந்தனம்
உலோடகமரம் - ஒட்டறைமரம்
உலோமசம் - சடாமாஞ்சில்
உலோமதகரிமரம் - கல்லாலமரம்
உவர்ச்சங்கஞ்செடி - முட்சங்கு
உவர்ச்சாறுநீறு - பூநீறு
உவர்நீர் - பூநீர்
உவர்ப்பறுகு - உப்பறுகு
உழலாத்திமரம் - ஊழலாத்தி
உழவணிகச்செடி - பொன்னாங்கண்ணிச்செடி
உழிஞைச்செடி - சிறுபூளைச்செடி
உழிஞ்சில்மரம் - அழிஞ்சில்மரம்
உளுந்துப்பயறு - கரும்பயறு
உள்ளி - வெங்காயம்
உள்ளிச்சுவேதம் - வெள்வெங்காயம்
உள்ளுலத்தீதக்கீரை - அகத்;தி
உள்ளுலவமரம் - சித்தொடுவை
உள்ளொட்டியிலைச்செடி - பிசினொட்டியிலைச்செடி
உறக்கமரிமரம் - பீநாறிமரம்
உற்பலக்கொடி - கருநெய்தல்
உற்பலசாகிதமரம் - கருவாகை
உற்பலசாணல் - பெருங்காயம்
உற்பலவனதைவேர் - சிவதைவேர்
உனத்தகுச்செடி - குறிஞ்சா
உனத்திதம்போக்கிச்செடி - கற்றுளசிச்செடி
உன்மத்தகிச்செடி - கொடிக்குறிஞ்சாச்செடி
உன்மத்தகோரச்செடி - கல்வாழைச்செடி
உன்மத்தஞ்செடி - ஊமத்தன்
உன்மந்தக்கொடி - செவ்விண்டு
உன்னதிமரம் - அழிஞ்சில்மரம்
உன்னமாகதச்செடி - புல்லாமணக்குச்செடி
உன்னயவங்கப்புல் - பீனசப்புல்
உன்னலாகச்செடி - பின்தொடரி
உன்னயப்புல் - சோனைபடபுல்
உன்னிமரம் - ஏரழிஞ்சில்மரம்
ஊகடன்மரம் - முருங்கைமரம்
ஊகண்டகச்செடி - கடலைச்செடி
ஊகத்தைச்செடி - ஊமத்தை
சித்த வைத்திய அகராதி 2251 - 2300 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

