சித்த வைத்திய அகராதி 2351 - 2400 மூலிகைச் சரக்குகள்
ஊழலாத்திமரம் - உழலாத்திமரம்
ஊழிக்காரன் - ரசம்
ஊறுகாய் - உப்புக்காய் , உணவுகாய்
ஊற்றருகி - நீர், தண்ணீர்
ஊனாங்கொடி - முடிப்புக்கொடி
ஊனாம்பதிச்செடி - கல்விருசு
ஊனாம்பற்பூ - ஊதா அல்லிப்பூ
ஊனாம்பற்கொடி - ஊதாம்பல்
ஊனோp - கற்பம்
ஊன்றுகாற்செடி - கழுதைத்தும்பைச்செடி
எகினத்திலை - புளியயிலை
எகினமரம் - புளிமாமரம்
எகினமாதிதக்கொடி - கழுதைக்குளம்படிக்கொடி
எகின்மரம் - அழிஞ்சில்மரம்
எகுகாத்தும்மைச்செடி - கழுதைத்தும்மைச்செடி
எகுன்றுக்கொடி - குன்றிமணி
எக்கியகுமாரிமரம் - செம்மரம்
எக்கியத்தாடு - வெள்ளாடு
எச்சினிமாதம் - ஏழாமாதம்
எட்டிக்கொடி - சீந்திற்கொடி
எட்டிமரம் - விஷமுட்டிமரம்
எட்டுதானிகமுத்து - நீர்வெட்டிமுத்து
எண்களப்பூடு - வெங்காயப்பூடு
எண்கேதனச்செடி - நிலம்புரண்டி
எண்ணெய்க்கோவை - கருங்கோவை
எண்ணெய்சொக்கிப்பூண்டு - கோனியப்பூண்டு
எண்ணெய்முறியிலைச்செடி - சதாப்பிலைச்செடி
எதகமூலம் - திப்பிலிமூலம்
எதாளரிமரம் - புளியமரம்
எதிர்ப்பாஞ்சான் - மீன்
எமநாகச்செடி - அசமதாகச்செடி
எமநாகச்செடி - ஓமவல்லிச்செடி
எமநாபிச்செடி - ஊமத்தைச்செடி
எமபதிமரம் - குங்கிலியமரம்
எம்புகச்செடி - நிலக்கடம்பு
எம்மாலிகச்செடி - வெள்ளுமத்தைச்செடி
எரிகாலன்செடி - வெள்ளையாதளை
எரிகுஞ்சிப்பூண்டு - மயிர்ச்சிகைப்பூண்டு
எரிசாலைச்செடி - நீர்மேல்நெருpப்பு
எரிசூதகப்பூடு - அமலைப்பூண்டு
எரிப்புத்திட்டம் - தீபாக்கினி, கமலாக்கினி, காடாக்கினி
எரிமுகிக்கொட்டை - சேங்கொட்டை
எரிமுட்டைப்பீநாறிச்செடி - பீநாறிச்சங்கஞ்செடி
எருக்கஞ்செடி - எருக்கிலைச்செடி
எருக்கத்திக்கொடி - குருக்கத்தி
எருக்கிலைச்செடி - அருக்கன்செடி
எருதுகன்னிமரம் - பசுமுன்னை
எருந்திச்செடி - பேராமுட்டி
எருந்தூகச்செடி - நிலவூமத்தை
எருமணிக்கொடி - செங்குவளை
எருமாகிதக்கீரை - காசினிக்கீரை
சித்த வைத்திய அகராதி 2351 - 2400 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

