சித்த வைத்திய அகராதி 2401 - 2450 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2401 - 2450 மூலிகைச் சரக்குகள்


எருமுட்டைக்பீநாறிச்செடி - வெதுப்படக்கிச்செடி
எருமுன்னைமரம் - பெருமுன்னை
எருமைகனைச்சான்மரம் - சுனையெருமைவிருட்சம்
எருமைக்கத்திரிp - பெருங்கத்திரி
எருமைக்கற்றாழை - கருங்கற்றாழை
எருமைக்காசிகச்செடி - முள்ளிக்கீரைச்செடி
எருமைக்காஞ்சொறிச்செடி - பெருஞ்செந்தொட்டிச்செடி
எருமைக்கொத்தான்கொடி - கொற்றான்கொடி
எருமைநாக்கிமூலி - மேகநாதமூலி
எருமைநாக்குப்புல் - கோரை
எருமைப்பாணிதம் - எருமைவெண்ணெய்
எருமைப்பால் - மேதிப்பால்
எருமைமுன்னைமரம் - பெருமுன்னைமரம்
எருவைக்கிழங்கு - கோரை
எருவைக்கோரை - சம்பங்கோரை
எருவைப்புல் - கோரைப்புல்
எரோகப்பாக்கு - களிப்பாக்கு
எர்க்கட்டரிசி - சீமைமூலிகை அரிசி
எலாக்கொட்டிக்கிழங்கு - கண்மாய்க்கொட்டிக் கிழங்கு
எலிகொல்லிப்பாஷாணம் - எலிப்பற்பாஷாணம்
எலிச்சீரகம் - பெருஞ்சீரகம்
எலிச்செவிக்கீரை - பாபலிக்கீரை
எலித்தாம்புகச்செடி - முள்ளிக்கத்திரிச்செடி
எலித்துரமமரம் - தான்றிமரம்
எலித்துளசி - குளிமீட்டான்பூண்டு
எலிபாகச்செடி - காட்டாமணக்கு
எலிபீகமரம் - கள்ளிமரம்
எலியாமணக்குச்செடி - வெள்ளையாதளைச்செடி
எலியாரிகக்கோரை - கற்கோரை
எலியால்செடி - காட்டாதளை
எலியொட்டிகம் - கற்சூரஞ்செடி
எலியோட்டிச்செடி - ஒட்டொட்டிச்செடி
எலியோட்டிக்சோபிச்செடி - காயாங்குலைச்செடி
எலியோட்டிப்பூண்டு - பிரவொட்டிப்பூண்டு
எலுமாசிகச்செடி - வேர்க்கடலை
எலுமிச்சைமரம் - இராசகனிமரம்
எலும்பு - வெள்ளெலும்பு
எலும்புச்சங்கமரம் - தில்லைவிருட்சம்
எல்லம் - இஞ்சிக்கிழங்கு
எல்லிநாதகிச்செடி - சந்திரகாந்தி
எழுகு - எகுவு - உருக்கு
எழுச்சிக்கொடி - கட்டுக்கொடி
எழுத்தாணிப்பூண்டுச்செடி - வரையாதனிப்பூண்டுச் செடி
எழுத்தாதகச்செடி - அரளி
எழுத்தாதித்தகடு - அயத்தகடு
எழுநாகச்செடி - இரணநாயகம்
எழுநாச்செடி - கொடுவேலிச்செடி
எழுநீரலரிச்செடி - அடுக்கலரி
எழுமுள்மரம் - மூட்தடிமரம்
எழுவாகைமரம் - பெருவாகை

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal