சித்த வைத்திய அகராதி 2451 - 2500 மூலிகைச் சரக்குகள்
எள்ளுச்செடி - கருப்பெள்ளு
எறியுப்பு - கல்லுப்பு
எறியூகரக்கொடி - நீர்ச்சுண்டி
என்புறிக்கொடி - கருஞ்சீந்தி
ஏகலாகிகம் - திப்பிலி
ஏகலியக்கொட்டி - களைக்கொட்டி
ஏகவாசமரம் - ஆலமரம்
ஏகவீரக்கள்ளி - மான்செவிக்கள்ளி
ஏகாரமரம் - வெக்காலிமரம்
ஏசிடாவகம் - அதிமதுரம்
ஏடகமரம் - ஆண்பனைமரம்
ஏடகாமரம் - பனைமரம்
ஏடகமுருங்கை - மலைமுருங்கை
ஏதுகச்செடி - சங்கஞ்செடி
ஏமநாகச்செடி - ஊமத்தைச்செடி
ஏமபத்திரமரம் - மலையாத்திமரம்
ஏமபாதிதமரம் - கள்ளிமரம்
ஏமபுட்பம் - மலைமுல்லை
ஏமபேதி பாஷாணம் - கற்கடகபாஷாணம்
ஏமம் - தங்கம்
ஏமலி - திலகப்பொட்டு
ஏமவதிக்காய் - கடுக்காய்
ஏமவாரிக்காளான் - மலைக்காளான்
ஏமற்கோனிகச்செடி - முதிரைக்கடலைச்செடி
ஏமனீர் - குமரிநீர் - கன்னிநீர்
ஏரண்டஞ்செடி - ஆமணக்கு
ஏரண்டம் - ஆமணக்குமுத்து
ஏரரத்தை - தும்புராஷ்டகம்
ஏரலிக்கொடி - கள்ளிக்கொடி
ஏரழிஞ்சில்மரம் - அழிஞ்சில்மரம்
ஏரிப்பிண்டம் - காக்காச்சிப்பி
ஏரியல்மரம் - வன்னிவாகைமரம்
ஏலக்காய்ச்செடி - நாட்டேலம்
ஏலக்கைக்கோவை - கற்கோவை
ஏலச்செடி - பேரேலச்செடி
ஏலரிசி - ஏலக்கொட்டை
ஏலாகச்செடி - குருக்குச்செடி
ஏலாபரணி - பறங்கிச்சக்கை
ஏலகச்செடி - சங்கஞ்செடி
ஏவாகனச்செடி - சங்கஞ்செடி
ஏவாங்கச்செடி - அசமதாகம்
ஏவாலுகம் - கச்சோலம்
ஏழிலைநொச்சி - நொச்சிச்செடி
ஏழிலைந்துபூதம் - அக்கினி
ஏழிலைப்பாலை - திருநாமப்பாலை
ஏழிலைமயிலை - மயிலைமரம்
ஏழிலைவள்ளிக்கிழங்கு - ஆள்வள்ளிக்கிழங்கு
ஏழைச்சாகிதம் - வள்ளிக்கிழங்கு
ஏனக்கோடு - பன்றிக்கொம்ப
ஏனக்கோடுகத்தூள் - பன்றிகொம்புத்தூள்
சித்த வைத்திய அகராதி 2451 - 2500 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

