சித்த வைத்திய அகராதி 251 - 300 மூலிகைச் சரக்குகள்
அட்டமுகடு - உச்சி
அட்டி - அதிமதுரம்
அட்டிகக்காய் - சாதிக்காய்
அட்டிதாமதம் - சிறுநீரகம்
அட்டிமதுரம் - அதிமதுரம்
அட்டிரமரம் - இலுப்பைமரம்
அட்டிமைச்சீரகம் - கருஞ்சீரகம்
அட்டிரபாணிதம் - சிவப்புப்புளியம் பிரண்டைக்கொடி
அட்டினம் - சீரகம்
அட்டுப்பு - காய்ச்சியவுப்பு
அணிச்சுரச்செடி - நாகமல்லிகை
அணிச்சுராவிதச்செடி - சிவப்புக் கீழ்காய் நெல்லிச்செடி
அணிஞ்சகச்செடி - கொடிவேலி
அணிஞ்சேபக்கொடி - சிவப்புக் குமிட்டிக் கொடி
அணிநுணாமரம் - மஞ்சணத்தி
அணிநோக்கிமரம் - சிவப்புக் கொன்னைமரம்
அணிமூலைக்காய் - பூசணிக்காய்
அணிமுலைப்பால் - பூசணிக் காம்பின்நீர்
அணுக்கமரம் - சந்தனமரம்
அணுக்காபிதமரம் - சிவப்புச் சந்தனமரம்
அண்டகமேனிச்செடி - குப்பை மேனிச்செடி
அண்டகெவுணச்செடி - காட்டுப் பருத்திச்செடி
அண்டக்கோசு - முட்டைக்கோசு
அண்டசம் - முட்டை
அண்டசவ்வு - முடிமாமிசம்
அண்டச்சிறுநீர் - மூத்திரம்
அண்டமுகடு - உச்சிமத்தி
அண்டம் - கோழிமுட்டை
அண்டரசம் - மூளைரசம் , முட்டையின் கரு
அதகக்கொடி - பெருமருந்து
அதபாமிர்தக்கொடி - சிவப்புச் சருக்கரைவள்ளிக் கொடி
அதமரம் - அத்திமரம்
அதம்பம் - கற்பரிபாஷாணம
அதர் - மருந்துக்கசடு
அதவுநெய் - அத்திப்பிசின்
அதவுமரம் - அத்திமரம்
அதளப்பிச்சிச் செடி - சிவப்புச் சீமைப்பிச்சிச்செடி
அதளமூலிக்கொடி - ஆடுதின்னாப் பாளைக்கொடி
அதளமேலிச்சாரணை - சிவப்புச் சத்திசாரணைக்கொடி
அதளைக் கொடி - விதுகங்காய்க் கொடி
அதாகசச்செடி - சிவப்புச் சிவதை
அதாசலக்கொடி - காட்டுமல்லிகைக் கொடி
அதிகண்ணிச்செடி - முன் துடரி
அதிகத்திக்கொடி - குருக்கத்திக் கொடி
அதிகநங்கைச் செடி - சிறியாநங்கைச்செடி
அதிகநாலச்செடி - கொடி வேலி
அதிகநாலினிக் கொடி - சிவப்புத் தட்டைப்பயிற்றுக்கொடி
அதிகநாவிச் செடி - வெண் நாவி
அதிகநேமிச்செடி - சிவப்புச்செவ்வந்திச்செடி
அதிகமாலிக்கொடி - குருக்கத்திக் கொடி
சித்த வைத்திய அகராதி 251 - 300 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal