சித்த வைத்திய அகராதி 2601 - 2650 மூலிகைச் சரக்குகள்
ஓரிதழ்தாமரை - ஓரிலைத்தாமரை
ஓரிதாமியக்கொடி - காத்தொட்டிக்கொடி
ஓரிலைத்தாமரை - ஓரிதழ்தாமரை
ஓருள்ளிப்பூடு - ஒருத்தலைப்பூடு
ஓர்திலிங்குமரம் - கோங்குமரம்
ஓர்ப்பிலந்தைமரம் - காட்டிலந்தைமரம்
ஓலமிடுவிருட்சம் - சுணங்க விருட்சம்
ஓளகாசப்புல் - சோதிப்புல்
ஓளசாதிகம் - மிளகு
ஓளசாலகமரம் - பூவந்திமரம்
ஔதசியமிளகு - வால்மிளகு
ஔதசேயச்செடி - காட்டுமுல்லை
ஔததாலகமிளகு - வெண்மிளகு
ஔதலேசிவல்லி - காட்டோமவல்லி
ஔநிகம் - தாமரைக்கொடி
ஔபரிதிக்செடி - அவுரிச்செடி
ஔபாசனப்புளி - பனம்புளி
ஔபாசனைக்கொடி - புளியம்பிரண்டைக்கொடி
ஒளரிதயவிலை - காரப்புகையிலை
ககபதிக்கொடி - கருடக்கொடி
ககபாரிமரம் - மருதுமரம்
ககபீகநாயகச்செடி - கிரந்திநாயகச்செடி
ககமாரச்செடி - மணத்தக்காளி
ககமூலிச்செடி - கிருமிச்சத்துருச்செடி
ககவசுமரம் - ஆலமரம்
ககுபமரம் - மருதுமரம்
கக்கரிக்கொடி - காட்டுவெள்ளரிக்கொடி
கக்குவறுணி - பிடரி
கங்காளன் - துருசு
கங்காளன்மூலி - சிவகரந்தை
கங்குத்தினை - கருந்தினை
கங்குப்பலா மரம் - கானற்பலாமரம்
கங்குப்பனை - அடுக்குப்பனை
கங்குற்கிறைச்செடி - சந்திரகாந்திச் செடி
கசகக்கொடி - வெள்ளரிக்கொடி
கசகக்கொள்ளு - கருங்கொள்ளு
கசகசாச்செடி - போஸ்துக்காய்ச்செடி
கசகசோபிதம் - கிராம்பு
கசகண்ணிக்கிழங்கு - வெருகங்கிழங்கு
கசகபாலிமரம் - கிளிமுருக்குமரம்
கசகரிகக்கொடி - கக்கரிக்கொடி
கசக்கார்மரம் - தேமாமரம்
கசக்குஞ்சிதக்கொடி - வெண்மொச்சைக்கொடி
கசங்கச்செடி - பீநாறிச்செடி
கசங்குகண்ணிச்செடி - தொட்டாற்சிணுங்கிச்செடி
கசங்குச்செடி - ஈஞ்சுச்செடி
கசங்கேதனிலை - பிறவொட்டியிலை
கசப்பகத்தி - பேயகத்தி
கசப்பாகிதச்செடி - பேய்க்கடலைச்செடி
கசப்புக்கசகசா - கருப்புக்கசகசா
சித்த வைத்திய அகராதி 2601 - 2650 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

