சித்த வைத்திய அகராதி 3151 - 3200 மூலிகைச் சரக்குகள்
கருஞ்சூகச்கொடி - அகச்சம்பங்கிக்கொடி
கருஞ்சூரகப்பட்டை - செங்கத்தாரிப்பட்டை
கருஞ்செந்தொட்டிச்செடி - கருங்காஞ்சொறிச்செடி
கருஞ்செம்புகம் - செண்பகமரம்
கருஞ்செம்பை மரம் - கருஞ்சித்திகத்திமரம்
கருஞ்சேம்பு - கல்லடிச்சேம்பு
கருஞ்சேதகம் - கருஞ்சீரகம்
கருஞ்சோரிச்செடி - கருங்காஞ்சொறிச் செடி
கருஞ்சோளம் - இறுங்குச்சோளம்
கருடச்சீரகம் - கருஞ்சீரகம்
கருடகசோபிதக்கொடி - கருடக்கொடி
கருடகச்செடி - குறிஞ்சாச்செடி
கருடக்கொடி - பேய்ச்சீந்தில்
கருடக்கொடிச்சி - கருடக்கொடி
கருடக்கோவைக் கிழங்கு - அடபைக்கோவை கிழங்கு
கருடசாரவுப்பு - கடலுப்பு
கருடாகணததிக்கொடி - காக்கனததிக்கொடி
கருடீகமரம் - மாவீழிமரம்
கருணைக்கிழங்கு - கரணைக்கிழங்கு
கருணைமுன்னைமரம் - எருமைனனைமரம்
கருத்தாளிமரம் - மையாளிமரம்
கருத்தேனகச் செடி - தொடரிச்செடி
கருநாகதாளிக்கொடி - கருப்புகதாளிக்கொடி
கருநாகத்திமரம் - காட்டாத்தீமரம்
கருநாகம் - கருவங்கம்
கருநாயுருவி - கருப்புநாயுருவி
கருநாரகவுள்ளி - காட்டீரள்ளி
கருநாரத்தைமரம் - கருப்புநாரத்தைமரம்
கருநாவி - பச்சைநாவி
கருநாவிக்கிழங்கு - கருங்கலப்பாக்கிழங்கு
கருநிமிளை - நீலாஞ்சனம்
கருநெய்தற்கொடி - கருங்குருவைக்கொடி
கருநெல் - கருங்குருவைநெல்
கருநெல்லிமரம் - உச்சிலிந்திமரம்
கருநொக்கிகம் - இந்திரியம்
கருநொச்சி - கருப்புநொச்சி
கருநோவகச்செடி - கச்சந்திராச்செடி
கருந்தகரைச்செடி - கருப்புத்தகரைச்செடி
கருந்தகிவிரை - காக்கைகொல்லிவிரை
கருந்தக்காளி - மிளகுதக்காளி
கருந்தக்கீகம் - இரசகற்பூரம்
கருந்தட்டைப்பயறு - கருப்புத்தட்டைப் பயறு
கருந்தணற்செடி - செந்நாயுருவிச்செடி
கருந்தாது - இரும்பு
கருந்தாதோதிகம் - கற்பூரதைலம்
கருந்தாளிக்கொடி - கருப்புத்தாளிக்கொடி
கருந்தாறிதபூரம் - கற்பூரம்
கருந்தினை - கருப்புத்திணை
கருந்துத்தி - கருப்புத்துத்தி
கருந்தும்பிராச்செடி - கற்பூரவல்லிச்செடி
சித்த வைத்திய அகராதி 3151 - 3200 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

