சித்த வைத்திய அகராதி 3201 - 3250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3201 - 3250 மூலிகைச் சரக்குகள்


கருந்தும்பை - கருப்புத்தும்பைச்செடி
கருந்துலி நீர் - காடி நீர்
கருந்துவரைச்செடி - கருப்புத்துவரை
கருந்துவரைப்பயறு - இரும்பிலிப்பயறு
கருந்துவரை - இரும்பிலிமரம்
கருந்துழாய் - கருந்துளசிச்செடி
கருந்துளகம் - கற்பூரவெற்றிலை
கருந்துளசி - கிருஷ்ணதுளசி
கருந்துளபம் - கருப்புத்துளசி
கருந்தேக்குமரம் - மந்திரசத்திமூலிமரம்
கருந்தேன் - பெண்ணழுக்கு
கருந்தையரிசி - காடைக்கண்ணியரிசி
கருந்தோளிச்செடி - அவுரிச்செடி
கருபுகாதிச்செடி - கச்சாந்தகரை
கருபுறமரம் - பனைமரம்
கருப்பக்கீரை - சாணாக்கீரை
கருப்பட்டி - பனங்கருப்பட்டி
கருப்பட்டிக்கற்கண்டு - பனங்கற்கண்டு
கருப்பட்டிவாகை - கப்பட்டிமரம்
கருப்பதூம்பரச்செடி - நீர்மேல் நெருப்புச்செடி
கருப்பம்மான் பச்சரிசி - கருப்புச்சித்திரப்பாலாடை
கருப்பறுகுச்செடி - இருளறுகுச்செடி
கருப்பாசயமரம் - பொரித்தேற்றன்மரம்
கருப்பி - இரும்பு
கருப்புகாமரம் - உருத்திரநங்கைமரம்
கருப்புக்கசகசா - கசப்புக் கசகசா
கருப்புக்கசடு - மருந்துக்கசடு
கருப்புக்கடலாரைக்கொடி - கடலாரைக்கொடி
கருப்புக்கடுகுரோகிணி - கருங்கடுகுரோகிணி
கருப்புக்கடுகோதயம் - கருங்கடுகு
கருப்புக்கடுக்காய் - கருங்கடுக்காய்
கருப்புக்கட்டி - பனங்கருப்பட்டி
கருப்புக்கரிக்கான்பயறு - உளுந்தம்பயறு
கருப்புக்கரிசலாங்கண்ணி - மைக்கரிப்பான்செடி
கருப்புச்சடையொட்டிப்புல் - சடையொட்டிப்புல்
கருப்புச்சித்திரமூலம் - கருங்கொடிவேலி
கருப்புநாவல் மரம் - சம்புநாவல்மரம்
கருப்புநெல் - கருங்குருவைநெல்
கருப்புநெல்லரிசி - கருங்குருவையரிசி
கருப்புநெற்கஞ்சி - விடம்போக்கிக்கஞ்சி
கருப்புநேதிரக்காய் - டிவிடிக்காய்
கருப்புப்பாணிதம் - கரும்புச்சாறு
கருப்புப்பாவட்டை - கரும்பாவட்டைச்செடி
கருப்புப்பூலாச்செடி - கரும்பூலாச்செடி
கருப்புமணத்தக்காளி - கருமணித்தக்காளிச்செடி
கருப்புமணித்தக்காளி - கருந்தக்காளிச் செடி
கருப்புமந்தாரை - கருமந்தாரை மரம்
கருப்புமாதிரச்செடி - கருவூமத்தைச்செடி
கருப்புவழுதலை - கருங்கத்திரி
கருப்பூரத்துளசி - கருந்துளசிச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal