சித்த வைத்திய அகராதி 3251 - 3300 மூலிகைச் சரக்குகள்
கருப்பெள்ளு - எள்ளு
கருப்பை - கெற்பம்
கருமகாலி - பெரும்பாடு - இரத்தம்விழுதல்
கருமஞ்சரிச்செடி - நாயுருவிசெடி
கருமஞ்சாரிகச்செடி - காட்டுவெண்டிச் செடி
கருமத்தன்செடி - கருவூமத்தை
கருமபூசுகிச்செடி - சுடலையாவரைச்செடி
கருமருதுமரம் - இருள்மருது
கருமருதைக்கொடி - கருங்கொடி
கருமருதோன்றிமரம் - கருப்புமருதோன்றிமரம்
கருமவிபீதச்செடி - சுடுதுரத்திச்செடி
கருமிளகுதக்காளி - கருந்தக்காளிச்செடி
கருமுகில்மேனி - கருவாகைமரம்
கருமுகிற்பாஷாணம் - கார்முகிற்பாஷாணம்
கருமுருகிமூலி - கையாந்தகரைச்செடி
கருமொச்சைக்கொடி - கருமொச்சைக்கொடி
கருமோலிக்கொடி - காத்தெக்கொடி
கரும்பயறு - சிறுபயறு
கரும்பனைக்கன்னிமரம் - கூர்னைமரம்
கரும்புத்தட்டை - இராமக்கரும்புத்தட்டை
கரும்புத்திரயம் - நாட்டுச்சாணம்
கரும்புரசு - கருப்புப்புரசமரம்
கரும்புரசேவிதம் - காட்டெரக்கு
கரும்புரமரம் - பனைமரம்
கரும்புள்மாருதிச்செடி - கறுப்புலாக்செடி
கரும்பூமத்தைச்செடி - கருப்பூமத்தைச்செடி
கரும்பூரவெற்றிலை - காட்டுவெற்றிலை
கரும்பூலா - நீர்ப்பூலா
கரும்பூனகமரம் - கருநெல்லி
கரும்பொன்னர் - கருவங்கம்
கருவஞ்சிப்பூண்டு - எழுத்துப்பூண்டு
கருவாகைமரம் - வன்னிவாகைமரம்
கருவாதியுப்பு - பூரணாதியுப்ப
கருவாப்பட்டை - லவங்கபட்டை
கருவாவிகச்செடி - காரஞ்சொறிசெடி
கருவாழைமரம் - கானல்வாழைமரம்
கருவிநீர் - உடல்நீர்
கருவிளநீர் - கருப்பிளநீர்
கருவிளநெல்லி - கீழ்க்காய்நெல்லிச்செடி
கருவிளாகிகமரம் - வில்வமரம்
கருவிளாதிகம் - கீரைத்தண்டு
கருவிளாமரம் - கருவேலாமரம்
கருவிளைக்கொடி - காக்கணக்கொடி
கருவீரிகம் - குல்கந்து
கருவீழிச்செடி - கருப்புவிழுதிச்செடி
கருவுகாதிதப்புல் - கோரைப்புல்
கருவநாதம் - விந்து
கருவுநீர் - நாதம்
கருவுப்பு - ஞானியுப்பு
கருவுள்ளி - பேயுள்ளி
சித்த வைத்திய அகராதி 3251 - 3300 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

