சித்த வைத்திய அகராதி 3301 - 3350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3301 - 3350 மூலிகைச் சரக்குகள்


கருவூமத்தைச்செடி - கருப்பூமத்தைச்செடி
கருவேசரிக்கொடி - கழுதைப்பாலாட்டங்கொடி
கருவேப்பிலை - கறிவேப்பிலை
கருவேம்புச்செடி - நிலவேம்பு
கருவேம்புமரம் - கருவேல்மரம்
கருவேல்மரம் - கருவேலாமரம்
கருவோடு - பேரண்டம், தலைஓடு
கரைகண்டர் - துருசு
கரைக்ணடுகச்செடி - கருவீழிச்செடி
கரைக்கல்லோலம் - கடற்பாசி
கரைக்கல்லோவப்பாசி - நீர்ப்பாசி
கர்ச்சூரங்காய் - கழற்சிக்காய்
கர்ச்சூரச்சேதன் - முருங்கைமரம்
கர்ச்சூரற்காய் - பேரிச்சங்காய்
கர்ணகண்டுரிமரம் - கடலழிஞ்சிமரம்
கலசக்சுரைக்கொடி - கும்பச்சுரைக்கொடி
கலப்புசுவன்னி - நவலோகபேதி
கலப்புநெய் - பலநெய்
கலப்புப்பாணிதம் - பலவெண்ணெய்
கலப்பைக் கிழங்கு - நார்த்திகைக் கிழங்கு
கலம்பகரிப்பட்டை - சுருளுப்பட்டை
கலம்பாசிசெடிவேர் - சீமைச்செடிவேர்
கலம்பாதிகவெற்றிலை - கற்பூர வெற்றிலை
கலம்பிக்கொடி - பசளைக்கொடி
கலராலகச்செடி - நீர்க்குளரிச்செடி
கலவைக்கீரை - பலகீரை
கலாகிஞ்சுகமரம் - கருவாகைமரம்
கலிகமரம் - வன்னிமரம்
கலிகாரிடக்கொடி - வாட்சுண்டிக்கொடி
கலிகைச்செடி - நாகமல்லிகை
கலிங்கத்துருமரம் - தான்றிமரம்
கலிங்கமரம் - வெட்பாலைமரம்
கலிய்காதீதக்கொடி - நாய்ப்பாகற்கொடி
கலிங்கம் - மிளக
கலிசத்திரக்கஞ்சி - கூழ்க்கஞ்சி
கலிசமரம் - வன்னிமரம்
கலிஞ்சகமரம் - வன்னிவாகைமரம்
கலிதியரிசி - திப்பிலியரிசி
கலித்துருமமரம் - தான்றிமரம்
கலிந்தப்பூடு - மலைதாங்கிப்பூடு
கலிமராகச்செடி - கிலுகிலுப்பை
கல்மாரிகம் - கேழ்வரகு, கேப்பை
கலிமாலிகமரம் - அகில்மரம்
கலியமரிசி - வெட்பாலையரிசி
கலியாணப்பூ - இலுப்பைப்பூ
கலியானப்பூசிணி - வெள்ளைப்பூசிணி
கலியாணமுருங்கைமரம் - முள்முருங்கைமரம்
கலியானவஞ்சிமரம் - கெட்டிவஞ்சிமரம்
கலியாணிமரம் - நீர்க்கடம்பமரம்
கலினாவரகு - கூவரகு

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal