சித்த வைத்திய அகராதி 3351 - 3400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3351 - 3400 மூலிகைச் சரக்குகள்


கலினியரிசி - கொள்ளுச்செடி
கலினைச்சேம்பு - கழற்சேம்புச்செடி
கலினைமிளகு - வெண்மிளகு
கலினோக்கொட்டான்விரை - நெய்க்கொட்டான்விதை
கலீரகமரம் - முள்முருக்குமரம்
கலுமிக்கஞ்சி - கூழ்க்கஞ்சி
கலுமிச்சை - எலுமிச்சைமரம்
கலேசிகச்செடி - கெவுரியச்சஞ்செடி
கலேயகம் - மஞ்சள்
கலைக்காதிகச்செடி - கருங்கொடிவேலிச்செடி
கலைநாறிமரம் - கஸ்தூரிநாறிமரம்
கலைப்பதிச்செடி - பெருஞ்சின்னிச்செடி
கலைமகக்கண்ணிச்செடி - வாடாமல்லிகைச்செடி
கல்தாமரை - கற்றாமரை
கல்தாமிகக்கொடி - கூவழிஞ்சிக்கொடி
கல்துளசி - முட்துளசிச்செடி
கல்நாதப்பூண்டு - கல்லுருவிப்பூண்டு
கல்பாசி - கற்பாசி
கல்மதமாலிமரம் - நெய்க்கொட்டான்மரம்
கல்மதம் - கல்நாதம்
கல்மாசுணக்கொடி - கருங்குன்றிமணிக்கொடி
கல்முரசுக்கொடி - நீர்கட்டுகொடி
கல்முராகிக்கொடி - குன்றிமணிக்கொடி
கல்மூங்கில் - கெட்டிமூங்கில்மரம்
கல்லாநதிகச்செடி - பாம்புகொல்லிச்செடி
கல்லகாரகிச்செடி - கொட்டான்கரந்தைச்செடி
கல்லகாரக்கொடி - செங்குவளைக்கொடி
கல்லகாரிசச்செடி - நீர்க்குளிரிச்செடி
கல்லடிக்காளான் - பெருஞ்காளான்
கல்லடிச்சேம்பு - பேய்ச்சேம்பு
கல்லடிப்பாஷாணம் - கற்கடகபாஷாணம்
கல்லத்திமரம் - மலையத்திமரம்
கல்லரவிந்தம் - கற்றாமரை
கல்லாளி - காட்டாளி
கல்லவநெல் - மலைநெல்
கல்லாகக்nhடி - செங்குவளைக்கொடி
கல்லாசிரியமரம் - கல்லுப்பனை
கல்லாம்பற்செடி - நீர்க்குளிரிச்செடி
கல்லாரிகவேர் - குருவேர்
கல்லாரை - காட்டாரைக்கொடி
கல்லாரைக்கொடி - கடலாலரைக்கொடி
கல்லால்மரம் - வரையால்மரம்
கல்லாளிகமரம் - வரையால்மரம்
கல்லாளிகமரம் - குருந்துமரம்
கல்லானை - பூநீறு
கல்லான்காரிச்செடி - கல்வாழைச்செடி
கல்லின்காரம் - கல்நார்
கல்லீகமரம் - குமிழ்மரம்
கல்லீயம் - நீலாஞ்சனம்
கல்லீயவமரம் - கல்விருசமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal