சித்த வைத்திய அகராதி 351 - 400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 351 - 400 மூலிகைச் சரக்குகள்


அத்தம் - தங்கம், பொன்         
அத்தர் - சந்தன அத்தர்
அத்தான்கொடி - முடக்கத்தான் கொடி      
அத்திகடியம் - திப்பிலி           
அத்திகண்ணிச்செடி -- கரிசிலாங்கண்ணிச் செடி        
அத்திகேசரக்கொடி - சிவப்பு வல்லிக் கொடி     
அத்திகோலமரம் - அழிஞ்சில்        
அத்திகோவிகக்கீரை - சிவப்பொலிச் செவிக்கீரை      
அத்திக்காளிக் கீரை - கோளிக்குறும்பான் கீரை         
அத்திக்காற்சுவடி - யானைக் காற்பூடு
அத்திக்குட்டிமலம் - கண்டில் வெண்ணெய்
அத்திக்கொடி - குருக்கத்தி      
அத்திக்கொம்பனதிவிடையம் - யானைக்கொம்பனதிவிடையம்
அத்திக்கோலிகச்செடி - சிறுகுறிஞ்சாச்செடி
அத்திகச்செடி - நீர்முள்ளிச்செடி
அத்திசாக்கொடி - கொடிமுந்திரி
அத்தித்திப்பிலி - யானைத் திப்பிலி
அத்தித்தேக்கிச்செடி - சிறுகொத்தவரைச் செடி
அத்திபுரசாதனிச்செடி - அவுரிச்செடி
அத்திபைரவிமரம் - சீனம் விளாமரம்
அத்திமரம் - காட்டத்திமரம்
அத்திமானச்செடி - ஆமணக்கு
அத்திமேற் புல்லுருவி - குஞ்சாமேற் புல்லுருவி
அத்திரம் - குக்கில்
அத்திராமரம் - அரசுமரம்
அத்திரிகாச்செடி - சிறு சிமிட்டி
அத்திருமரம் - வேந்தன்மரம்
அத்துகச்செடி - ஆமணக்கு
அத்துகமானிமரம் - மன்னன்மரம்
அத்துகமேதிச்செடி - சிறுசிலும்பான்செடி
அத்துகாமணக்குச் செடி - ஆமணக்குச்செடி
அத்துகோசகம் - சிறுசீரகம்
அத்துசம் - மரமஞ்சள்
அத்துமணிமரம் - அரசமரம்
அத்துமம் - அரத்தை
அத்துமாகச்செடி - சிறு செந்தொட்டிச்செடி
அத்துலிக்கொடி - சிறு தெல்லுக்கொடி           
அத்துவர்க்கயம் - மைச்சீரகம்        
அநங்கலிச்செடி - சிறு தேட்கொ டுக்குச்செடி      
அநங்கன்பூ - இருவாட்சிப்பூ               
அநுசூதைமரம் - புளியமரம்         
அந்தகச்செடி - ஆமணக்குச்செடி        
அந்தகாரமரம் - நெல்லிமரம்        
அந்தகோரமரம் - நெலலிமரம்       
அந்தசடம் - வயிறு            
அந்தரத்தாமரை - குளிர்தாமரை       
அந்தரத்தேசரிக் கொடி - சிறுபசளைக் கொடி        
அந்தரவல்லிக்கிழங்கு - கருடன் கிழங்கு        
அந்தரவறுனிக்கொடி - சிறு நெருஞ்சிற்கொடி          
அந்தரவனசப்பாசி - கொடிப்பாசி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal