சித்த வைத்திய அகராதி 401 - 450 மூலிகைச் சரக்குகள்
அந்தாரப்பனை - தொட்டிப்பனை, சிறுபனை
அந்திப்பீழைச்செடி - சிறு பீழை
அந்திப்பூச்செடி - அந்திமல்லிகைப் பூச்செடி
அந்திமந்தாரைச்செடி - அந்திமல்லிகைச் செடி
அந்திமரித்தான் கொடி - சிறுபேய்க் குமட்டிக்கொடி
அந்திமலர்ந்தான் செடி - அந்திப் பூச்செடி
அந்திமலாகிகச்செடி - அந்தி மந்தாரைச் செடி
அந்திமல்லிகைச்செடி - அந்தி மந்தாரைச் செடி
அந்திரலோகிதக்கொடி - சிறுபொடுதலைக் கொடி
அந்திவிருட்சம் - தில்லைவிருட்சம்
அந்திவீருகச்செடி - சிறுமுள்ளங்கிச் செடி
அந்தேசாலகமரம் - தேற்றாமரம்
அப்பைமரம் - கொன்றை
அந்தேசோவிகப்பூண்டு - சிறுவெழுத்தாணிப்பூடு
அந்தோர்மரம் - நெல்லிமரம்
அபசகச்செடி - சிற்றிலந்தை
அபந்தலப்பட்டை - செங்கத்தாரிப்பட்டை
அபமார்க்கச்செடி - நாயுருவி
அபானநீர் - குடத்துநீர்
அபானியக்காய் - கடுக்காய்
அபிரங்கிமரம் - கருநெல்லிமரம்
அபிற்சாந்துப்பட்டை - பூஞ்சாந்துப்பட்டை
அபிற்சீரமரம் - சிற்றீஞ்சுமரம்
அபின் - அபினி
அப்பகச்செடி - வட்டத்திருப்பி
அப்பகாசச் சேம்புச்செடி - சீமைச்சேம்புச்செடி
அப்ரப்பட்டை - ஆவரம்பட்டை
அப்பளாகாரம் - சவுக்காரம்
அப்பாகவரிசி - வாலுளுவையரிசி
அப்பிரகநீர் - அவுரிநீர்
அப்பிரகம் - வியோசத்திபாஷாணம்
அப்பிரியமரம் - ஓதியமரம்
அப்பிருதிப்பழம் - பேரீச்சம்பழம்
அப்பீரகமரம் - புளிப்புமாமரம்
அப்பீராப்பழம் - சீமையத்திப்பழம்
அப்பு - தண்ணீர்
அப்புத்திரட்டிக்கொடி - கட்டுக்கொடி
அப்புநீறு - கடலுப்பு
அப்புப்பு - கஞ்சியுப்பு
அப்புராமரம் - பாகிரிமரம்
அப்புலொகிதம் - சீமையிலந்தை
அப்புளண்டம் - தகரைச்செடி
அப்புளாகாசக்கொடி - வேரில்லாக்கொத்தான்கொடி
அப்பைக்கோவை - கற்கோவை
அப்பைச்சேவகச்செடி - சீமையாமணக்குச்செடி
அப்பைமரம் - கொன்றைமரம்
அப்பைமாரிகச்செடி - செங்கத்திரிச்செடி
அப்ரேகபாஷாணம் - வியோசத்தி பாஷாணம்
அமண்டலச்செடி - ஆமணக்கு
அமண்டலாதிமரம் - செங்கடம்பு
சித்த வைத்திய அகராதி 401 - 450 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal