சித்த வைத்திய அகராதி 3551 - 3600 மூலிகைச் சரக்குகள்
கற்சத்து - கல்நார்
கற்சூரக்காய் - பேரிச்சங்காய்
கற்சூரக்கொடி - கழற்சிக்கொடி
கற்சூரஞ்செடி - சூரஞ்செடி
கற்சூரசுங்கன் - சப்பாத்துக்கள்ளி
கற்சூரமாதிதமரம் - சவுக்குமரம்
கற்சூரம்பழம் - பேரிச்சம்பழம்
கற்சூரம்பாச்செடி - செருப்படைச்செடி
கற்சூர்மரம் - பேரிச்சமரம்
கற்பகவிருட்சம் - மேதைவிருட்சம்
கற்பகாண்டக்கீரை - கோழிக்கீரை
கற்பக்கடம்புமரம் - நீர்க்கடம்புமரம்
கற்பரிபாஷாணம் - சதம்வாசிப்பாஷாணம்
கற்பலாமரம் - அசிதோகாமரம்
கற்பாகினிமரம் - பப்பாளிமரம்
கற்பாகீகமரம் - கற்பகவிருட்சம்
கற்பாசாகிகமரம் - காட்டுப்புங்குமரம்
கற்பாஷாணம் - குந்தகபாஷாணம்
கற்பாசி - கல்பாசி - சிலைப்பாசி
கற்பாஞ்சான்காயம் - பெருங்காயம்
கற்பிரண்டை - முப்பிரண்டை
கற்பீரகக்கொடி - கல்லாரைக்கொடி
கற்புரிச்செடி - முல்லைச்செடி
கற்க - கற்றாமரைப்பூ
கற்பூரகண்ணிச்செடி - பொன்னாங்கண்ணிச்செடி
கற்பூரச்செடி - சீமைச்செடி
கற்பூரத்திரவியம் - கற்பூரத்தயிலம்
கற்பூரத்தோதியம் - காட்டுக்கொள்ளுச்செடி
கற்பூரம் - சூடன்
கற்பூரவகாரி - ரசகற்பூரம்
கற்பூரவல்லிச்செடி - கனகவல்லிச்செடி
கற்பூரவெற்றிலை - வாசனைவெற்றிலை
கற்பொடி - அன்னபேதி
கற்றாமரை - கல்தாமரை
கற்றாலிகச்செடி - வேர்க்கடலைச்செடி
கற்றாழை - குமரிக்கற்றாழை
கற்றிண்டுக்செடி - கழுதைத்தும்பைச்செடி
கற்றுளசிச்செடி - மலைத்துளசிச்செடி
கற்றூகிதக்கொடி - தலைசுருளிக்கொடி
கற்றேக்குமரம் - இலட்சைகட்டைமரம்
கனகசபை - தலைப்போண்டம்
கனகமிளகு - வால்மிளகு
கனகமூலி - சோற்றுக்கற்றாழை
கனகம் - தங்கம்
கனகரசம் - அரிகாரம்
கனகவல்லிச்செடி - கற்பூரவல்லிச்செடி
கனகவுப்பு - கல்லுப்பு
கனகாட்சிப்புல் - சோதிப்புல்
கனகாரியச்செடி - ஊமத்தைச்செடி
கனங்காக்கிழங்கு - கோரைக்கிழங்கு
சித்த வைத்திய அகராதி 3551 - 3600 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

