சித்த வைத்திய அகராதி 3751 - 3800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3751 - 3800 மூலிகைச் சரக்குகள்


காட்டீலைமரம் - கடுக்காய்மரம்
காட்டுக்கடலை - வேர்க்கடலை
காட்டுக்கடுகுச்செடி - நாய்க்கடுகுச்செடி
காட்டுக்கத்திரி - பேய்க்கத்திரி
காட்டுக்கத்தோதித வரிசி - சாமையரிசி
காட்டுக்கரணை - மருந்துக்கரணை
காட்டுக்கருசீரகம் - கருஞ்சீரகம்
காட்டுக்கருணை - காட்டுக்கரணைக்கிழங்கு
காட்டுக்கரும்பு - பேய்க்கரும்பு
காட்டுக்கரோசயப்பருப்பு - சாரப்பருப்பு
காட்டுக்கறிவேப்பிலைமரம் - ஆனாந்தளைமரம்
காட்டுக்கானாவாழை - கானல்வாழைமரம்
காட்டுக்குருந்துமரம் - காட்டெலுமிச்சைமரம்
காட்டுக்குறிஞ்சிக்கொடி - குறிஞ்சாக்கொடி
காட்டுக்கொட்டி - கொட்டிக்கிழங்கு
காட்டுக்கொட்டேகமரம் - சாலிமரம்
காட்டுக்கொத்தமல்லி - பேய்க்கொத்தமல்லி
காட்டுக்கொழுகிக்கீரை - சிறுக்கீரை
காட்டுக்கொழுமிச்சை - கசப்புக்கொழுமிச்சை
காட்டுக்கொள்ளிச்செடி - நின்றிடந்தீஞ்சான் செடி
காட்டுக்கொள்ளு - பேய்க் கொள்ளுச்செடி
காட்டுக்கோதிகச்செடி - சிறுகுமிழ்ச்செடி
காட்டுக்கோதுமை - வார்க்கோதுமை
காட்டுக்கோரை - பெருங்கோரை
காட்டுச்சதகுப்பை - சதகுப்பை
காட்டுச்சம்பங்கிக்கொடி - உரோமவாசனிக்கொடி
காட்டுச்சருக்கரைக்கிழங்கு - பூமிச்சருக்கரைக் கிழங்கு
காட்டுச்சாரணைக்கொடி - மூக்கரைச்சாரணைக்கொடி
காட்டுச்சீரகம் - சிறுசீரகம்
காட்டுக்சுரை - பேய்ச்சுரை
காட்டுச்சோதிமரம் - சோதிவிருட்சம்
காட்டுத்தம்பட்டையவரை - பேய்த்தம்பட்டையவரை
காட்டுத்துவரை - இரும்பிலிமரம்
காட்டுத்துளசிச்செடி - நாய்த்துளசிச்செடி
காட்டுத்தேக்கு - சிறுதேக்கு
காட்டுத்தேற்றாமரம் - பேய்த்தேற்றாமரம்
காட்டுத்தொனிமரம் - அசோகுமரம்
காட்டுநறுவள்ளி - காய்வள்ளிக்கிழங்கு
காட்டுநாயகச்செடி - கிரந்திநாயகச்செடி
காட்டுநாரத்தைமரம் - பெருங்குருந்துமரம்
காட்டுநெல்லிமரம் - கருநெல்லிமரம்
காட்டுப்பருத்தி - பேய்ப்பருத்தி
காட்டுக்பலவரிசி - சௌவரிசி
காட்டுப்பலாமரம் - கானற்பலாமரம்
காட்டுப்பலிகப்பட்டை - சன்னலவங்கப்பட்டை
காட்டுப்பழு பாகற்கொடி - பழுபாகற்கொடி
காட்டுப்பாகலிச்செடி - சற்பநாயகச்செடி
காட்டுப்பாகற்கொடி - நாய்ப் பாகற்கொடி
காட்டுப்பாகிகச்செடி - குறண்டிச்செடி
காட்டுப்பாக்குச்செடி - பேய்ப்பாக்குச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal