சித்த வைத்திய அகராதி 501 - 550 மூலிகைச் சரக்குகள்
அமைமரம் - கூந்தற்கமுகுமரம்
அமைமோனிச்செடி - செங்கொடுவேலிச்செடி
அமையப்புல் - இலாமிச்சைப்புல்
அமோகினிமரம் - பாதிரிமரம்
அம்பகக்கிழங்கு - சேம்புகிழங்கு
அம்பகாகிதம் - செங்கொட்டான்
அம்பகிப்பாளை - ஆடுதின்னாப்பாளைச் செடி
அம்பங்கியரிசி - விழாவரிசி
அம்பணமரம் - வாழைமரம்
அம்பாநேமிச்செடி - வெண்கிலுகிலுப்பைச்செடி
அம்பரை - நிமிளை
அம்பரைநாதம் - அப்பிரகம்
அம்பர் - சீமையம்பர்
அம்பலக்காணி - செங்கொய்யா
அம்பலக்காச்சி - வாதரக்காச்சி
அத்துலிக்கொடி - சிறு தெல்லுக் கொடி
அத்துவர்க்கயம் - மைச்சீரகம்
அநங்கலிச்செடி - சிறு தேட்கொடுக்குச்செடி
அகங்கன்பூ - இருவாட்சிப்பூ
அநுசூதைமரம் - புளியமரம்
அந்தகச்செடி - ஆமணக்குச்செடி
அந்தகாரமரம் - நெல்லிமரம்
அந்தகோரமரம் - நெல்லிமரம்
அந்தசடம் - வயிறு
அந்தாத்தாமரை - குளிர்தாமரை
அந்தரத்தேசரிக் கொடி - சிறுபசளைக் கொடி
அந்தரவல்லிக்கிழங்கு - கருடன் கிழங்கு
அந்தரவறுனிக்கொடி - சிறு நெருஞ்சிற் கொடி
அந்தரவனசப்பாசி - கொடிப்பாசி
அந்தரப்பனை - தொட்டிப் பனை, சிறுபனை
அந்திப்பீழைச்செடி - சிறுபீழை
அந்திப்பூச்செடி - அந்திமல்லிகைப் பூச்செடி
அந்திமந்தாரைச் செடி - அந்தி மல்லி கைச்செடி
அந்திமரித்தான்கொடி - சிறுபேய்க் குமட்டிச்கொடி
அந்திமலர்ந்தான் செடி - அந்தி பூச்செடி
அந்திமலாகிகச்செடி - அந்தி மந்தாரைச் செடி
அந்திமல்லிகைச் செடி - அந்தி மந்தாரைச் செடி
அந்திரலோகிதக்கொடி - சிறுபொடுதலைக் கொடி
அந்திவிருட்சம் - தில்லைவிருட்சம்
அந்திவீருகச்செடி - சிறுமுள்ளங்கிச் செடி
அந்தேசாலகமரம் - தேற்றாமரம்
அந்தேசோலிகப்பூண்டு - சிறுவெழுத்தாணிப்பூடு
அந்தோர்மரம் - நெல்லிமரம்
அபசகச்செடி - சிற்றிலந்தை
அபந்தலப்பட்டை - செங்கத்தாரிப்பட்டை
அபமார்க்கச்செடி - நாயுருவி
அபரமார்க்கச்செடி - நாயுருவி
அபானநீர் - குடத்துநீர்
அபானியக்காய் - கடுக்காய்
அபிரங்கிமரம் - கருநெல்லிமரம்
சித்த வைத்திய அகராதி 501 - 550 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal