சித்த வைத்திய அகராதி 551 - 600 மூலிகைச் சரக்குகள்
அபிற்சாந்துப்பட்டை - பூஞ்சாந்துப்பட்டை
அபிற்சீரமரம் - சிற்றீஞ்சுமரம்
அபின் - அபினி
அப்பகச்செடி - வட்டத்திருப்பி
அப்பாகாசச் சேம்புச்செடி - சீமைச்சேம்புச்செடி
அப்ரப்பட்டை - ஆவரம்பட்டை
அப்பளக்காரம் - சவுக்காரம்
அப்பாகவரிசி - வாலுளுவையரிசி
அப்பிரகநீர் - அவுரிநீர்
அப்பிரகம் - வியோசத்தி பாஷாணம்
அப்பிரியமரம் - ஓரியமரம்
அப்பிருதிப்பழம் - போPச்சம்பழம்
அப்பீரகமரம் - புளிப்புமாமரம்
அப்பீராப்பழம் - சீமையத்திப்பழம்
அப்பு - தண்ணீர்
அப்புத்திரட்டி க்கொடி - கட்டுக்கொடி
அப்புநீறு - கடலுப்பு
அப்புப்பு - கஞ்சியுப்பு
அப்புராமரம் - பாதிரிமரம்
அப்புலொகிதம் - சீமையிலந்தை
அப்புளண்டம் - தகரைச்செடி
அப்புளாகாசக்கொடி - வேரில்லாக் கொத்தான்கொடி
அப்பைக்கோவை - கற்கோவை
அப்பைச்சேவகச்செடி - சீமையாமணக்குச்செடி
அப்பைமரம் - கொன்றைமரம்
அப்பைமாரிகச்செடி - செங்கத்திரிச் செடி
அப்ரேகபாஷாணம் - வியோசத்தி பாஷாணம்
அமண்டலச்செடி - ஆமணக்கு
அமண்டலாதிமரம் - செங்கடம்பு
அமந்தலப்பட்டை - செங்கத்தாரிப்பட்டை
அமந்தாசிகப்பட்டை - சுருளுப்பட்டை
அமராங்சனமரம் - சந்தனமரம்
அமரிதக்காய் - கடுக்காய்
அமரிதாவிகச்செடி - செங்கரிப்பான்செடி
அமரிப்பூல் - பேய்ப்புல்
அமரிப்பூகச்செடி - செங்கரந்தை
அமரியமரம் - குருந்துமரம்
அமரியுப்பு - சிறுநீருப்பு
அமலகமரம் - அரிநெல்லிமரம்
அமலக்காய் - அரிநெல்லிக்காய்
அமலமஞ்சள் - மரமஞ்சள்
அமலைச்சோறு - அரிசிச் சோறு
அமலைக்காய் - கடுக்காய்
அமலைதாரம் - அரிதாரம்
அமளைப்பூண்டு - அரிப்பூண்டு
அமளோகிதத்தண்டு - செங்கீரைத்தண்டு
அமனிதச்செடி - புளியாரை
அமாமிக்கடம்பு - செங்கடம்பு
அமிரம் - மிளகு
அமிராகிதமரம் - செங்கருங்காலி
சித்த வைத்திய அகராதி 551 - 600 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal