சித்த வைத்திய அகராதி 601 - 650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 601 - 650 மூலிகைச் சரக்குகள்


அமிர்தக்கொடி - சீந்திற்கொடி     
அமிர்தசாமரம் - செஞ்சிந்தகத்தி    
அமுக்கிராச்செடி - அசுவகந்தி      
அமுங்காரக்கொடி - நெட்டி கொடி        
அமுசகக்கொடி - செருப்படை     
அமுதகரந்தை - சிவகரந்தை      
அமுதக்காய் - கடுக்காய்      
அமுதக்குவிகம் - செங்கற்றாழை    
அமுதக்கொடி - சீந்திற்கொடி     
அமுதக்கோணிகச்செடி - செங்கிழுவைச்செடி
அமுதங்கச்செடி - சதுரக்கள்ளி
அமுதசர்க்கரை - சீந்திற்சர்க்கரை
அமுதசாரமரம் - வெள்வேளா
அமுதசாரம் - தேன், கற்கண்டு
அமுதச்சேவிதம் - சிறுகுறிஞ்சா
அமுதச்சோகிதம் - செங்குமிழ்
அமுதகரம் - மஞ்சிட்டிவேர்
அமுதநீர் - பிண்டநீர், சூதகநீர்
அமுதமரம் - நெல்லிமரம்
அமுதவல்லிக்கொடி - சீந்திற்கொடி
அமுதவிந்து - வலைரசம்
அமுதாரிக்கொடி - பூனைக்காலி
அமுதமரம் - எலுமிச்சை
அமுத்தமரம் - நெல்லிமரம்
அமுரிநீர் - சிறுநீர்
அமுர்தபலக்கொடி - பேய்ப்புடல்
அமேதகம்நீக்கி - கற்றாழை
அமேத்தியமரம் - மூங்கில்மரம்
அமைச்சாகிதச்செடி - செங்குருந்தொட்டிச்செடி
அமைமரம் - கூந்தற்கமுகுமரம்
அமைமோனிச்செடி - செங்கொடுவேலிச்செடி
அமையப்புல் - இலாமிச்சைப்புல்
அமோகினிமரம் - பாதிரிமரம்
அம்பகக்கிழங்கு - சேம்பு கிழங்க
அம்பகாதிதம் - செங்கொட்டான்
அம்பகிப்பாளை - ஆடுதின்னாப்பாளைச் செடி
அம்பங்கியரிசி - விழாவரிசி
அம்பணமரம் - வாழைமரம்
அம்பாநேமிச்செடி - வெண்கிலுகிலுப்பைச்செடி
அம்பரை - நிமிளை
அம்பரைநாதம் - அப்பிரகம்
அம்பர் - சீமையம்பர்
அம்பலக்காணி - செங்கொய்யா
அம்பலக்காச்சி - வாதரக்காச்சி
அம்பலக்கோடகம் - கோடகசாலை    
அம்பலத்திமரம் - தான்றிமரம்      
அம்பலத்தோதிகச்செடி - செஞ்சதுரக்கள்ளி       
அம்பல விருட்சம் - தில்லைமரம்             
அம்பலவேகிச்செடி - செஞ்சூரன்     
அம்பளங்காய் - சீனத்துக்காய்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal