சித்த வைத்திய அகராதி 651 - 700 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 651 - 700 மூலிகைச் சரக்குகள்


அம்பளாகைமரம் - அகத்திமரம்    
அம்பியம் - கள்ளு         
அம்புசம் - தாமரை         
அம்புசம்மாகிகம் - செடிக்காசரைக்கீரை     
அம்புசன்மக்கொடி - தாமரை  
அம்புசாகிதச்செடி - செடித்தம்பட்டையவரை    
அம்புசாதக்கொடி - கட்டுக்கொடி            
அம்புசேதிகச்செடி - செங்கொழுஞ்சிச்செடி      
அம்புதப்புல் - கோரைப்புல்              
அம்புநீர் - விந்துநீர்         
அம்புப்பிரசாதனம் - தேற்றாங் கொட்டை    
அம்புப்பிரசிகச்செடி - செங்கொள்ளுச்செடி   
அம்புயக்கொடி - தாமரைக்கொடி  
அம்புலிச்செடி - சந்திரகாந்தி  
அம்புவாகினிமரம் - எலுமிச்சை    
அம்புவியரசு - செடிப்பூவரசு             
அம்பைவேர் - வெட்டிவேர்    
அம்பொருந்தகரை - செந்தகரை    
அம்போருகக்கொடி - தாமரை    
அம்மச்சிமரம் - செந்தணக்குமரம்    
அம்மட்டிக்கிழங்கு - கொட்டிக்கிழங்கு      
அம்மாதிகச்செடி - செந்திரா   
அம்மான்பச்சரிசிச்செடி - சித்திரப் பாலாடை      
அம்மியபாவைச்செடி - செந்தாடு பாவைச்செடி   
அம்மிரமரம் - மாமரம்
அம்மிராமரம் - கெந்தாழைமரம்
அம்மிலவிருட்சம் - புளியமரம்
அம்மையார்கூந்தல் - சவுரி கொடி
அம்மைவேணிச்செடி - வெண் தகரைச்செடி
அம்மோனியாகப்பிசின் - சீமைப்பிசின்
அயகத்தினை - செந்தினை
அயகம் - வசம்பு
அயக்காந்தமரம் - வெண்தேவதாரிமரம்
அயக்காந்தம் - ஊசிக்காந்தம்
அயக்கிராமரம் - கானல்மரம்
அயதிப்பாலை - திருநாமப்பாலை
அயத்திராச்செடி - செந்துருக்கன்செடி
அயத்திற்குத் தாய் - கெந்தகம்
அயத்தீ - இரும்புத் தொட்டிப்பாஷாணம்
அயமரம் - செண்டாளிமரம்
அயமவாதி - வசம்பு
அயமி - வெண்கடுகு
அயமிராச்செடி - செந்தும்பை
அயம் - இரும்பு   
அயம்மியச்செடி - செந்துவரை
அயலி - வெண்கடுகு
அயவாரிக்கொடி - செந்நாகதாளிக்கொடி
அயவாரிதி - வசம்பு
அயவாருகச்செடி - நெந்நாயுருவி
அயவிகம் - சிற்றரத்தை

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal