சித்த வைத்திய அகராதி 5651 - 5700 மூலிகைச் சரக்குகள்
சரோசக்கொடி - தாமரைக்கொடி
சரோசிகச்செடி - வாற்பூலாசெடி
சரோருகமலர் - தாமரைமலர்
சர்க்கயாமரம் - நச்சிலைச்கூமாமரம்
சர்ப்பராசிச்செடி - பிச்சுவிளாத்திச்செடி
சர்வவேதிகமரம் - வேங்கைமரம்
சலகண்டகிசேம்பு - நீர்ச்சேம்பு
சலகாகிச்செடி - சிவதைச்செடி
சலகாங்கக்கொடி - தாமரைக்கொடி
சலகாசமச் செடி - தொழுகண்ணிச்செடி
சலசப்பத்திரம் - தாமரையிலை
சலசப்பூ - தாமரைப்பூ
சலசப்பூரிதக்காய் - வரிக்கடுக்காய்
சலசனம் - தாமரை
சலந்திரட்டிக்கொடி - பெருங்கட்டுக்கொடி
சலபித்தீதம் - தீ, நெருப்பு
சலரசம் - உப்பு , கஞ்சியுப்பு
சலருகக்கொடி - தாமரைக்கொடி
சலவகத்திச்செடி - சீமையகத்திச்செடி
சலவகப்பிசின் - இலவம்பிசின்
சலவுகம் - ஆண்குறி , லிங்கம்
சலிகத்திப்பிலி - நறுக்குத்திப்பிலி
சலிகாச்சுண்டி - வரற்சுண்டிக்கொடி
சலினி - திப்பிலி
சலோகிதச்செடி - வயல்நெட்டிச்செடி
சலோற்சம் - குங்குலியம்
சல்லகாமிக்கொடி - வல்லாரைக்கொடி
சல்லகிகாச்செடி - தேட்கொடுக்குச்செடி
சல்லகிதாமரம் - விஷமருதமரம்
சல்லகிமரம் - இலவமரம்
சல்லியக்கரு - பிண்டக்கரு
சல்லியம் - யீடு
சல்லிவேர் - மாக்கொடி - நருஞ்சுக்கொடி
சவுட்டுமண்ணு - உவர்மண்
சவத்தினிட்டி - பிணஞ்சுடுகோல்
சவுரிக்கொடி - கொடியார்கூந்தல்
சவுரித்தாகிதமரம் - விருசமரம்
சவரிவீரிப்பழம் - குறட்டைப்பழம்
சவரேசமரம் - வெள்வாகைமரம்
சவிகச்செடி - விஷ்ணுகரந்தைச்செடி
சவிகற்பவக்கொடி - ஊதா அல்லிக்கொடி
சவுகந்தி - வசம்பு
சவுக்கிரியாச்செடி - எரிபூடுச்செடி
சவுக்குமரம் - சடாதரிமரம்
சவுங்காதிகமரம் - வெள்ளையகில்மரம்
சவுங்காதியுப்பு - பூநிருப்பு
சவுசயமரம் - முருங்கைமரம்
சவுசவியக்கிழங்கு - விப்பிருதழக்கிழங்கு
சவுண்டகம் - திப்பிலி
சவுண்டகவுப்பு - சவுட்டுப்பு
சித்த வைத்திய அகராதி 5651 - 5700 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

