சித்த வைத்திய அகராதி 5701 - 5750 மூலிகைச் சரக்குகள்
சவுண்டதிவிரை - நாயுருவிவிரை
சவுபாக்கியம் - சுக்கு
சவுபாச்சியவிரை - நீர்முள்ளிவிரை
சவுரிக்கொடி - அம்மையார் கூந்தல்
சவுளகமரம் - உரோமவிருட்சம்
சவுளகாவிரை - புரசவிதை
சவுனாகச்செடி - கையாந்தகரை
சவுனாதிதச்செடி - விராலிச்செடி
சவ்வரிசி - மரவள்ளிமாவரிசி
சவ்வாது - பூனைமதம்
சவ்வியசிமரம் - மருதமரம்
சவ்வியம் - மிளகு
சவ்வீரம் - கொச்சிவீரம்
சளகந்தம் - வசம்பு
சளகேதமரம் - வெள்ளை யீருகொல்லிமரம்
சறுதாகமரம் - வேங்கைமரம்
சறுதாகிகமரம - வாதரக்காட்சிமரம்
சறுதாவிகவிதை - பூவரசவிதை
சறுலாவிக்காய் - சிவப்புக்கடுக்காய்
சறுவானுகவேர் - சிவதைவேர்
சறுவி - வண்ணான்
சற்சுவாதிக்கொடி - பெருமருந்துக்கொடி
சற்பகண்டக்கொடி - முரக்கவரைக்கொடி
சற்பநாயகச்செடி - கீரிப்பூண்டு
சற்பநீர் - அமுரிநீர்
சற்பாட்சிமரம் - சன்னகரைமரம்
சற்பிகாமிகமரம் - அனிச்சமரம்
சனகக்கீரை - புளியாரைக்கீரை
சனகப்பாகிதம் - தேசாவரம்
சனகப்பூலிதம் - வசம்பு
சனகப்போகிதம் - சித்தரத்தை
சனகிப்பட்டை - புழக்கைப்பட்டை
சனகிப்பூண்டு - செங்கழுநீர்ப்பூக்கொடி
சனநீயம் - நெய்
சனமாலிகமரம் - இலவமரம்
சனமாவியவிரை - ஆலவிதை
சனிகை - பெண், வனிதை
சனிபாகமரம் - கொன்றைமரம்
சனிபூரகமரம் - பெருந்துவரைமரம்
சலுசம் - மிளகு
சன்மபீதத்தாமரை - கடற்றாமரைக்கொடி
சன்னகரைமரம் - சற்பராசிமரம்
சன்னகாவாளம் - நேர்வாளம்
சன்னசாலக்கடுகு - வெண்கடுகு
சன்னராஷ்டகம் - சிற்றரத்தை
சன்னராட்டிரம் - சிற்றரத்தை
சன்னலவங்கப்பட்டை - சிறுலவங்கப்பட்டை
சன்னிக்கிழங்கு - காட்டுக்கரணைக்கிழங்கு
சன்னிக்குடோரிக் கிழங்கு - கிச்சிலிக்கிழங்கு
சன்னிநாயகச்செடி - தும்பைச்செடி
சித்த வைத்திய அகராதி 5701 - 5750 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

