சித்த வைத்திய அகராதி 5751 - 5800 மூலிகைச் சரக்குகள்
சன்னிப்பட்டை மரம் - மயிற்குருந்துமரம்
சன்னியமஞ்சள் - மரமஞ்சள்
சன்னியோரகக்காய் - கப்பற்கடுக்காய்
சன்னிரோதயமரம் - இனிப்பிலந்தைமரம்
சாகசக்கீரை - சிறுகீரை
சாகசிவிரை - மருதோன்றிவிரை
சாகடக்கொடி - மாட்டுக்குளம்படிக்கொடி
சாகயமரம் - தேக்குமரம்
சாகரமரம் - கடலழிஞ்சிமரம்
சாகரமலம் - கடல்நுரை
சாகாக்கிழங்கு - கருடன்கிழங்கு
சாகரங்கம் - மிளகு
சாகாங்கிச்சிவதை - சிவப்புச்சிவதை
சாகாதமூலி - அமிர்தக்கொடி
சாகாதுயில்மரம் - அகில்மரம்
சாகாமருந்து - தேவாமிர்தம் , சஞ்சீவிமருந்து
சாகாமூலிக்கெடி - சீந்திற்கொடி
சாகாவீகிமரம் - சாயாவிருட்சம்
சாகினிக்கீரை - சிறுகீரை
சாகினிதவரிசி - வாலானாசி
சாகினியச்செடி - சேம்புச்செடி
சாகேசப்பிசின் - இலவம்பிசின்
சாங்கசக்கொடி - சீந்திற்கொடி
சாங்குலம் - நஞ்சுக்கொடி
சாங்குணிக்கிழங்கு - புளிநறளைக்கிழங்கு
சாசகாபாஷாணம் - கெளரிபாஷாணம்
காசிப்பூண்டு - திராய்ப்பூண்டு
சாசியாமரம் - செண்பகமரம்
சாசியாவிரை - அரசவிதை
சாசினக்கடுகு - வெண்கடுகு
சாசுகச்சோளம் - சிவப்புசோளம்
சாஞ்சயச்செடி - கடலாமணக்குச்செடி
சாமகத்திவிரை - இத்திக்காய்விரை
சாடிகம் - திப்பிலி
சாடித்தவக்கொடி - கற்கோவைக்கொடி
சாட்டுகப்புல் - அறுகுப்புல்
சாட்டுடைவிருட்சம் - சவுக்குமரம்
சாணாக்கீரை - பாச்சிக்கீரை
சாணாங்கியச்செடி - மக்கிச்செடி
சாணிகப்பூரிக்கொடி - பீர்ககுக்கொடி
சாணைப்பதச்செடி - மருக்களங்காய்ச்செடி
சாதகப்புட்பம் - கடல்நுரை
சாதகலம்பபாஷாணம் - தாலம்பபாஷாணம்
சாதலப்பூண்டு - திராய்ப்பூண்டு
சாதலப்போவிரை - துத்திவிரை
சாதலமிளகு - வெண்மிளகு
சாதலிச்சிட்டிக்கீரை - நெய்ச்சிட்டிக்கீரை
சாதவண்டுலக்கொடி - புடோல்கொடி
சாதவீகமிளகு - வால்மிளகு
சாதவேதச்செடி - கொடுவேலி
சித்த வைத்திய அகராதி 5751 - 5800 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

