சித்த வைத்திய அகராதி 5851 - 5900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5851 - 5900 மூலிகைச் சரக்குகள்


சாமுண்டிகத்துவரை - பேய்த்துவரை
சாமுண்டிகிவிரை - பொன்னாவரைவிரை
சாமுண்டிச்செடி - அவுரிச்செடி
சாமுதாப்புல் - கோரைப்புல்
சாமேசிகவரிசி - சாமையரிசி
சாமையரிசி - புனலரிசி
சாம்பகிக்கொடி - நெருஞ்சிற்கnhடி
சாம்பக்கிருமி - சுடலை
சாம்பசதாசிவன்வேம்பு - சிவனார்வேம்புச்செடி
சாம்பசிவப்புல் - அறுகம்புல்
சாம்பலொட்டிச்செடி - எருக்குச்செடி
சாம்பல்மரலிமரம் - சிறுநாவல்மரம்
சாம்பல்வருணிக்கொடி - செருப்படைக்கொடி
சாம்பவிப்பாஷாணம் - கெளரிபாஷாணம்
சாம்பவிவிந்து - நாதநீர்
சாம்பற்பூசணிக்கொடி - பெரும்பூசணிக்கொடி
சாம்பாகினிக்கொடி - பசலிக்கொடி
சாம்பாரிக்கொடி - கறிப்புடோற்கொடி
சாம்பான்செடி - எருக்கலைச்செடி
சாம்பிராணி - பாற்சாம்பிராணி
சாம்புகிமரம் - நாவல்மரம்
சாயக்கிழங்கு - மஞ்சட்கிழங்கு
சாயச்சம்பங்கி - கொடிச்சம்பங்கி
சாயப்பட்டை - வேம்பாடம்பட்டை
சாயப்பாக்கு - தகட்டுப்பாக்க
சாயப்பாசிதமரம் - நுணாமரம்
சாயப்புல் - திரட்கோரைப்புல்
சாயப்பூலிகக்கொடி - சிவப்புப்பசலிக்கொடி
சாயமரம் - சீனமரம்
சாயவிராதகக்காய் - கடுக்காய்
சாயவிருட்சம் - நிழற்காந்தவிருட்சம்
சாயவேர் - நுணாவேர்
சாய்மேதகவேர் - சிவதைவேர்
சாய்மேதிதப்பூ - குங்குமப்பூ
சாரகந்தனம் - சந்தனம்
சாரகாரம் - பொரிகாரம்
சாரகாரவுப்பு - சீனவுப்பு, அதாவது குளோர்ட்டுப்பு
சாரக்கிழங்கு - சிறுகிழங்கு
சாரங்கச்செடி - குறிஞ்சாச்செடி
சாரங்கதீரச்செடி - காட்டுத்துளசிச் செடி
சாரசக்கொடி - தாமரைக்கொடி
சாரசமாகிகம் - கருங்கடுக்காய்
சாரடைக்கொடி - சாரணைக்கொடி
சாரணத்திக்கொடி - சத்திச்சாரணைக்கொடி
சாரணைக்கொடி - செஞ்சாரணைக்கொடி
சாரதமரம் - பூகமரம்
சாரதி - துருசு
சாரதிக்குமிழ் - சிறுகுமிழ்செடி
சாரதீபமரம் - இலுப்பைமரம்
சாரதீயவச்செடி - கருங்காஞ்சொறிச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal