சித்த வைத்திய அகராதி 5951 - 6000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5951 - 6000 மூலிகைச் சரக்குகள்


சாறதிப்படை - சிறுசெருப்படைக்கொடி
சாறுதாரிச்செடி - கையாந்தகரைச்செடி
சாறுவேலிகக்கொடி - சாரணைக்கொடி
சாறுவேளைச்செடி - தைவேளைச்செடி
சாற்காந்தன்மரம் - மலையாத்திமரம்
சானகாவிதச்செடி - சீதாசெங்கழுநீர்ச்செடி
சானகிச்சாரணை - வெள்ளைச்சாரணை
சானகிச்செடி - பொன்னாங்கண்ணிச்செடி
சானகிமரம் - மூங்கில்மரம்
சானக்கிமூலி - சாணாக்கீரை
சானக்கிமேனிச்செடி - குப்பைமேனிச்செடி
சானங்கிமரம் - மூங்கில்மரம்
சானசிச்செடி - பொன்னாவரைச்செடி
சானியக்கீரை - சிறுகீரை
சானியத்திரையம் - குரோசாணியோமம்
சானினிச்செடி - சேம்புச்செடி
சான்மலிப்பத்திரம் - வில்வப்பத்திரம்
சான்மலிமரம் - இலவமரம்
சான்மூலிகை - சிறுதேக்கு
சான்றோனின்செடி - சீமைச்செடி
சான்றோன்மூலிகை - கொடியெலுமிச்சைமரம்
சிகண்டிகைக்கொடி - கருங்குன்றிமணிச்செடி
சிகண்டிதச்செடி - சிற்றாமணக்குச்செடி
சிகத்திராமரம் - கடுக்காய்மரம்
சிகமதாகிகம் - அரத்தை
சிகமாததிகமரம் - கோங்கிலவமரம்
சிகரநீறு - பூநீறு
சிகரப்பாகிதமரம் - கோங்குமரம்
சிகரப்பாடிகம் - கோஷ்டம்
சிகரப்பூசிதமரம் - சந்தனமரம்
சிகரி - புல்லூரி
சிகரிதாமகமரம் - சந்தனமரம்
சிகரித்தேக்கு - சிறுதேக்கு
சிகரிநிம்பமரம் - மலைவேப்பமரம்
சிகரிமாதியமரம் - சரனைத்தேவதாரிமரம்
சிகரியந்தம் - புல்லூரி
சிகரியவிரை - அரைக்கீரைவிதை
சிகரியூமத்தைச்செடி - கருவூமத்தைச்செடி
சிகரெட்டுக்சுருள் - சிகரெட்டு
சிகரோசிதமரம் - இலச்சைகெட்டமரம்
சிகர்நாவிக்கிழங்கு - வெள்ளைநாவிக்கிழங்கு
சிகலோகமரம் - அகில்மரம்
சிகாண்டகமரம் - கொடுக்காப்புளிமரம்
சிகாவலம் - கொடிப்பாசி
சிகானவக்கிழங்கு - வெந்தோன்றிக்ழங்கு
சிகிக்காலடிப்பூண்டு - மயிற்காலடிப்பூண்டு
சிகிக்கிரிவதட - மயில்துத்தம்
சிகிடியாமரம் - கொட்டைமுந்திரிமரம்
சிகிப்பீலி - மயிலிறகு
சிகை - ரோமம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal