சித்த வைத்திய அகராதி 6001 - 6050 மூலிகைச் சரக்குகள்
சிகைக்காபிகமரம் - நெடுநாரைமரம்
சிகைக்காய் - சீயக்காய்
சிகைநீர் - அண்டநீர்
சிகைவேங்கைமரம் - ரோமவேங்கைமரம்
சிகோரகப்பூ - நெய்தற்பூ
சிக்கடிக்கொடி - அவரைக்கொடி
சிக்கரப்பூசணி - வெள்ளைப்பூசணி
சிக்கிரம் - தலைமயிர்
சிக்குருமரம் - முருங்கைமரம்
சிக்குருவிரை - முருங்கைவிதை
சிக்குவிகச்செடி - நெய்ச்சிட்டிச்செடி
சிக்குவை - நாக்கு
சிங்ககச்செடி - ஆடாதோடைச்செடி
சிங்கத்தாளிச்செடி - நேத்திரநாயகச்செடி
சிங்கத்துளசிச்செடி- துளசிச்செடி
சிங்கத்தூளிகாமரம் - கற்பலாமரம்
சிங்காகிக்காரம் - லெங்காரம்
சிங்கி - மிருதார்சிங்கி
சிங்கிகக்கத்திரி - கறிமுள்ளிக்கத்ரிரி
சிங்கிகச்சீரிதம் - நொங்கு, பனைநொங்கு
சிங்கிக்கொடி - வல்லாரைக்கொடி
சிங்கிடாகமரம் - நெல்லிமரம்
சிங்கிடாப்பாளை - கொடிப்பாளை
சிங்கிட்டமரம் - பாலைமரம்
சிங்கிரிக்காரம் - சீனிக்காரம்
சிங்கிரிப்பாலை - நாய்ப்பாலை கொடி
சிங்கிரூகச்செடி - நொச்சிச்செடி
சிங்கிரூகிவிரை - தருப்பூசணிவிதை
சிங்கிலாக்காரம் - எண்ணெய்வெங்காரம்
சிங்கிலிக்கொடி - குன்றிமணிக்கொடி
சிங்கிவேர்ப்புல் - சுக்குநாறிப்புல்
சிங்குவை - உள்நாக்ககு
சிங்கொனாபர்க்குச்செடி - சீமைச்செடி
சிங்கோரிகமரம் - நொச்சிமரம்
சிசகரிமரம் - நொச்சிமரம்
சிசகரிமரம் - தமரத்தைமரம்
சிசிகாமிகச்செடி - நேத்திரஞ்சிமிட்டிச்செடி
சிசிகிக்கொடிக்கிழங்கு - நெய்தற்கிழங்கு
சிசிரம் - சந்தனம்
சிசிலக்கொடி - கற்பாசிக்கொடி
சிசுகாதிதவெள்ளு - வெள்ளையௌளு
சிசுமாந்தக்கொடி - மாந்தக்கொடி
சிசுமூலிகாச்செடி - நூலாஞ்செடி
சிசுரவாரிச்செடி - கிலுகிலுப்பைச்செடி
சிசுராவிகவிரை - ஆவரைவிதை
சிசுவாரினி - பிறந்தகுழந்தை
சிசுளகசாலை - கோடகசாலை
சிச்சிலிப்பிரண்டை - கோப்பிரண்டைக்கொடி
சிஞ்சகமரம் - புளிமரம்
சிஞ்சகாபிகக்கொடி - நெடும்புடற்கொடி
சித்த வைத்திய அகராதி 6001 - 6050 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

