சித்த வைத்திய அகராதி 6101 - 6150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6101 - 6150 மூலிகைச் சரக்குகள்


சித்தாமுக்கிகமரம் - பப்பாளிமரம்
சித்தாமுட்டி - குரவிச்சிப்பூண்டு
சித்தாமோகச்செடி - சன்னிநாயகச்செடி
சித்தாரிக்கடுகு - வெண்கடுகு
சித்தானந்தக்கீரை - சாணாக்கீரை
சித்தானிக்கிழங்கு - நிலப்பனைக்கிழங்கு
சித்திகாப்பூடு - கீரிப்பூடு
சித்திக்கிழங்கு - கொட்டிக்கிழங்கு
சித்திக்குறிமரம் - எட்டிமரம்
சித்திதச்செடி - கடுகுச்செடி
சித்திரகச்செடி - கொடுவேலிச்செடி
சித்திரகாமரம் - சிறுநாங்கில்மரம
சித்திரணி - முடக்கம்
சித்திரப்பாலாடை - அம்மான்பச்சரிசி
சித்திரப்பாலை - சின்னம்மான்பச்சரிசி
சித்திரமணக்குச்செடி - ஆமணக்குச்செடி
சித்திரமூலம் - கொடுவேலி
சித்திரமூலாசிதம் - பச்சைக்கற்பூரம்
சித்திரவரி - கண்முளி
சித்திராசிகவிரை - தகரைவிதை
சித்திரி - கண்
சித்தரியாட்டுப்பால் - வெள்ளாட்டுப்பால்
சித்திரைப்பூ - பூநீறு
சித்திவலையரிசி - அம்மான்பச்சரிசி
சித்துரிச்செடி - கிலுகிலுப்பைச்செடி
சித்துருபவாளம் - நேர்வாளம்
சித்துரப்பூச்செடி - இருவாட்சிப்பூச்செடி
சித்தூதிகக்காய் - இளநீர்க்காய்
சித்தேதன்விரை - தாமரைவிதை
சித்தொடுவைச்செடி - சிற்றொடுவைச்செடி
சிநேகபலச்செடி - எள்ளுச்செடி
சிநேகபோதைக்காய் - சாதிக்காய்
சிந்தகப்பாஷாணம் - வெள்ளைப்பாஷாணம்
சிந்தகப்பூ - சிறுநாகப்பூ
சிந்தகம் - புளி
சிந்திமரம் - வாதரக்காட்சிமரம்
சிந்துகச்செடி - நொச்சிச்செடி
சிந்துகநீர் - மூக்குநீர்
சிந்துகியகத்தி - சீமையகத்திச்செடி
சிந்துரக்காய் - கடுக்காய்
சிந்துரச்செடி - வெட்சிப்பூச்செடி
சிந்துரத்தாதிகமரம் - எலுமிச்சை மரம்
சிந்துரமரம் - புளியமரம்
சிந்துருணிப்பட்டை - புளியம்பட்டை
சிந்துருணியிலை - புளியிலை
சிந்துலவணம் - கடலுப்பு
சிந்துவாரச்செடி - நொச்சிச்செடி
சிந்துவாரிமரம் - நொச்சிமரம்
சிந்தூகக்கொட்டை - சேங்கோட்டை
சிந்தூரமரம் - புளியமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal