சித்த வைத்திய அகராதி 6151 - 6200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6151 - 6200 மூலிகைச் சரக்குகள்


சிப்பாதிவேளைச்செடி - தைவேளைச்செடி
சிப்பிநீர் - சுத்தகங்கைநீர்
சிமட்டிக்கொடி - கொடிச்சிணுங்கி
சிமந்தாதிப்பாக்கு - பச்சைப்பாக்கு
சிமந்தாரிகச்செடி - சிறுபுள்ளடிச்செடி
சிமாகச்செடி - சுவற்று முள்ளங்கிச்செடி
சிமிக்கிமல்லிகைச்செடி - சீமைமல்லிகைச்செடி
சிமிங்கிமரம் - கடுக்காய்மரம்
சிமிட்டிச்செடி - சிறுசிமிட்டிச்செடி
சிமிட்டுக்கன்னிச்செடி - நேத்திரஞ்சிமிட்டிச்செடி
சிமிளிகச்செடி - பூளைச்செடி
சிமுடிகக்கொடி - பயிற்றங்காய்க்கொடி
சிமுட்டிகச்செடி - கீழ்காய்நெல்லிச்செடி
சிம்பகாப்பாசி - பழம்பாசி
சிம்பதைச்செடி - சிறு புள்ளடிச்செடி
சிம்பைக்கொடி - அவரைக்கொடி
சிம்மந்தாசிகவிரை - புன்னைக்கொட்டை விரை
சிம்மந்துகச்செடி - கொள்ளுக்காய்வேளைச்செடி
சியச்சினிக்கொடி - வேலிப்பருத்திக்கொடி
சியத்தாவிமரம் - பவளமல்லிகைமரம்
சியத்தினிச்செடி - தக்காளிச்செடி
சியநாயகபாஷாணம் - துத்தபாஷாணம்
சியிந்தகக்காய் - கடுக்காய்
சிரகசிதப்பூடு - பல்லிப்பூடு
சிரகசீனி - சீனிச்சருக்கரை
சிரகாதண்டை - குழலாதொண்டைக்கொடி
சிரகாதிப்பட்டை - பறங்கிப்பட்டை
சிரகாமணக்குச்செடி - ஆமணக்குச்செடி
சிரக்குழிச்செடி - நத்தைச்சூரிச் செடி
சிரத்தசக்காரைச்செடி - மதுக்காரைச்செடி
சிரத்தராக்கொட்டை - அக்ரோட்டுக்கொட்டை
சிரத்தவிக்கொடி - சருக்கரைக்குமிட்டிக்கொடி
சிரமமடக்கி - வாத மடக்கிக்கொடி
சிரமிலிமரம - சிற்றுடைமரம்
சிரிடகமரம் - வாகைமரம்
சிருங்காசிகச்செடி - இஞ்சிச்செடி
சிரேவணச்செடி - காட்டாமணக்குச்செடி
சிரோசனவேம்பு - கிவனார்வேம்பு
சிரோட்டகக்காய் - கடுக்காய்
சிரோட்டிரமரம் - தான்றிமரம்
சிரோணிகச்செடி - காட்டாமணக்குச்செடி
சிரோதிகப்பூடு - பனிதாங்கிப்பூடு
சிரோந்திதக்கொட்டை - பூந்திக்கொட்டை
சிரோந்தகமரம் - மயிர்க்கொன்னைமரம்
சிரோவிகம் - மிளகு
சிலகயக்கள்ளி - செஞ்சதுரக்கள்ளிச்செடி
சிலந்திகவரிசி - வாலுளுவையரிசி
சிலந்திநாயகச்செடி - இலைக்கள்ளிச் செடி
சிலாசத்து - கற்பூரசிலாத்து
கிலாசயச்செடி - செந்துருக்கன்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal