சித்த வைத்திய அகராதி 7551 - 7600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7551 - 7600 மூலிகைச் சரக்குகள்


டமரத்தை மரம் - தமரத்தைமரம்
டாணிக்காய்மரம் - தான்றிக்காய்மரம்
டாமற்செடி - சீமைச்செடி
டாம்சோபிதச்செடி - சீனத்துச்செடி
டாமிரச்சிகைச்செடி - தாமிரச்சிகைச்செடி
டிரலாங்கொடி - திரளங்கொடி
டிராப்பூண்டு - திராய்ப்பூண்டு
டிஜிடேலீஸ்செடி - சீமைச்செடி
டிஜிடேவ்செடி - சீமைச்செடி
டிரேகாச்செடி - காந்தச்செடி
டிரேகிகாச்செடி - சீமைச்செடி
டோராக்கிஸ்செடி - சீமைச்செடி
டோலாக்கியச்செடி - சீமைச்செடி
டோழாமரம் - இலுப்பைமரம்
தகருமரம் - புன்முருங்கைமரம்
தகரூகிகப்பாக்கு - சாயப்பாக்கு
தகரைச்செடி - பூந்தகரைச்செடி
தகனசேதனம் - புகை
தகுவிமாக்கொட்டை - சேங்கொட்டை
தகைத்தவச்செடி - மருவுச்செடி
தக்கனைக்கொன்றான் மூலி - சிவனார்வேம்பு
தக்காரிகைச்செடி - வாதமடக்கிச்செடி
தக்காவிச்சோளம் - செஞ்சோளம்
தக்காளி - குட்டித்தக்காளி
தக்கினை - பானை, பாண்டம்
தக்கோலமிளகு - வால்மிளகு
தங்கரளிமரம் - காசியரளிமரம்
தங்கராசிகச்செடி - மஞ்சளந்திமல்லிகைச்செடி
தங்கைகொல்லிச்செடி - சிறியாணங்கைச்செடி
தசமூலம் - கண்டங்கத்திரி, சிறுமல்லிகை, சிறுவழுதுணை, தழுதாழை,  நெருஞ்சி, பாதிரி, பெருங்குமிழ்,பெருமல்லிகை,
வாகை, வில்வம் ஆக 10.
துசமைக்கண்ணிச்செடி - பொன்னாங்கண்ணிச்செடி
துசையத்திப்பழம் - சீமையத்திப்பழம்
தச்சினியம் - உருவம்
தட்டம் - பெண்குறி
தட்டான்காய்ச்கொடி - தட்டைப்பயற்றின்கொடி
தட்டிகக்கிழங்கு - நிலப்பனைக்கிழங்கு
தட்டிகாத்தும்பை -காசித்தும்பைச்செடி
தட்டிலம் - சதகுப்பை
தட்டுப்பலாச்செடி - தந்தப்பலாச்செடி
தட்டுமாதுச்செடி - மேகசஞ்சீவிச்செடி
தட்டைப்பயற்றின்கொடி - பயற்றங்காய்க்கொடி
தட்டைப்பீருகம் - கம்பரிசி
தட்டைமரம் - மூங்கில்மரம்
தட்டையாதீகவரிசி - சோளரிசி
தட்டையாமணக்கு - குச்சியாமணக்கு
தணக்காசிகமரம் - நுணாமரம்
தணக்குமரம் - தணக்கமரம்
தணலாகினிச்செடி - கொடுவேலிச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal