சித்த வைத்திய அகராதி 7601 - 7650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7601 - 7650 மூலிகைச் சரக்குகள்


தணலிச்செடி - எருக்குச்செடி
தணவகாமரம் - மஞ்சட்சித்தகத்திமரம்
தணவமரம் - அரசமரம்
தணவையாக்கிழங்கு - வெந்தோன்றிக்கிழங்கு
தண்டங்கீரை - தண்டுக்கீரைச்செடி
தண்டு - ஆண்குறி
தண்டுலமரம் - மூங்கில்மரம்
தண்டுலிக்கீரை - தண்டங்கீரை
தண்டுலியக்கீரை - சிறுகீரை
தண்ணீரூரிக்கொடி - தண்ணீர்க்கொடி
தண்ணீர்ப்பாசி - நீர்ப்பாசி
தண்ணீர்மீட்டான்கிழங்கு - சதாவோக்கிழங்கு
ததிகமாமரம் - தேற்றாமரம்
ததிபத்திரிமரம் - வாழைமரம்
ததிபலமரம் - விளாமரம்
ததிமேகுமரம் - குடைவேல்மரம்
தந்தகக்காரி - வாதமடக்கிச்செடி
தந்தக்கோரை - பெருங்கோரை
தந்தசிகமரம் - எலுமிச்சைமரம்
தந்தசூகம் - பாம்பு, அரவம்
தந்தபத்திரச்செடி - மல்லிகைச்செடி
தந்தபலாதிமரம் - விளாமரம்
தந்தம் - கொம்பு, நகம், பல்
தந்தியாவனமரம் - கருங்காலிமரம்
தந்திரிதமரம் - வெண் குங்கிலியமரம்
தந்திரிதிகச்செடி - கற்சூரஞ்செடி
தந்திலத்தி - யானைலத்தி
தந்திவாளம் - நேர்வாளம்
தந்திவிரை - நேர்வாளவிரை
தந்துகம் - கடுகு
தந்துகாசிதவாழை - மகரவாழை மரம்
தந்துசாரமரம் - கமுகுமரம்
தந்துசீர்மேதை - மகாமேதை
தந்துபம் - கடுகு
தந்துபலை - திப்பிலி
தந்துவிகாமரம் - வாழைமரம்
தபசியப்பூ - முல்லைப்பூ
தபலத்தி - நிர்வாணி
தபனகச்செடி - கொடுவேலி
தபனீயம் - பொன்
தபிமுத்திரி - வருத்தல்
தப்பிச்சிமரம் - ஆவிமரம்
தமாகமரம் - தமரத்தைமரம்
தமாகம் - வங்கம்
தமரகவொலிச்செடி - கிலுகிலுப்பைச்செடி
தமாகிச்செடி - கொடுவேலிச்செடி
தமரத்தைமரம் - தம்பரத்தைமரம்
தமர்க்கவக்கொடி - பீர்க்குக்கொடி
தமனகம் - மருக்கொழுந்து
தமனிதாபாக்கு - கொட்டைப்பாக்கு

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal