சித்த வைத்திய அகராதி 801 - 850 மூலிகைச் சரக்குகள்
அரிதின்பாலை - திருநாமப்பாலை
அரித்திகாச்செடி - நரிவிழிச்செடி
அரித்திரம் - மஞ்சள்
அரித்திராபோகிச்செடி - நின்று சிணுங்கி
அரிநெல்லிமரம் - அருநெல்லிமரம்
அரிப்பிரியமரம் - நேயமரம்
அரிப்பூண்டு - அமலைப்பூண்டு
அரிமகத்துவமரம் - தேக்குமரம்
அரிமஞ்சரிச்செடி - குப்பைமேனி
அரிமகாவாழை - நவரைவாழை
அரிமலமரம் - மாவுலிங்கமரம்
அரிமாமரம் - ஒட்டுமாமரம்
அரிமைதாமரம் - வெள்வேலாமரம்
அரிமோதகிமரம் - நவுகுமரம்
அரியசமரம் - கொன்றைமரம்
அரியசாரணை - சாரணைக்கொடி
அரியனைச்செல்வி - அரிதாரம்
அரியுப்பு - கரியுப்பு
அரியோகிதக் கற்றாழை - நாகபடக்கற்றாழை
அரிலமரம் - மூங்கில்மரம்
அரிலாதிகமரம் - நாட்டுவாழை
அரிவாள்மூக்குச்செடி - மிளிரை
அரிவீகமரம் - நெடுநாரைமரம்
அருகசனிசெடி - பேரேலச்செடி
அருகசாமிகச்செடி - சிறுகடலைச்செடி, பச்சைக்கடலை
அருகசிக்கொடி - சீந்திற்கொடி
அருகணமிளகாய் - பச்சமிளகாய்
அருகணிக்கொடி - பிரண்டை
அருகணோதைமரம் - பச்சை வாழைமரம்
அருகியாத்தச்செடி - பூனைக்காலி
அருகோலச்செடி - பஞ்ச வர்ணஅந்திமல்லிகைச் செடி
அருக்கஞ்செடி - எருக்கஞ்செடி
அருக்கணக்கடலை - உருண்டைக்கடலை, பட்டாணிக்கடலை
அருக்கன்கொம்பு - சுக்கு
அருக்கனகோபிகமரம் - பொந்தம்புளிமரம்
அருக்கங்செடி - எருக்குச்செடி
அருக்கன்பாரிச்செடி - நிலக்குரா
அருக்கன்பால் - எருக்கன்பால்
அருஞ்கோவை - அப்பைகோவை
அருசகாமரம் - பப்பாப்புளிமரம்
அருசாகுமிழ்மரம் - பெருங்குமிழ்
அருசாரைமரம் - நாரைமரம்
அருசுனஞ்செடி - எருக்கஞ்செடி
அருணபகம் - மிளகு
அருணமரம் - எலுமிச்சைமரம்
அருணவேலி - கொடுவேலி
அருணன் - சூரியன்
அருணாதிமரம் - வேப்பமரம்
அருணைமரம் - பாலைமரம்
அருதாவிலை - சதாப்பிலை
சித்த வைத்திய அகராதி 801 - 850 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

