சித்த வைத்திய அகராதி 851 - 900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 851 - 900 மூலிகைச் சரக்குகள்


அருதாவேசனி - பெருங்காளான்  
அருத்திரமஞ்சள் - மரமஞ்சள்  
அருத்திரமாசுப்பழம் - பம்பளிமாசுப்பழம்   
அருத்துருமமரம் - வெள்வேலா  
அருத்துரோகிதச்சசெடி - பரங்கியாமணக்குச்செடி   
அருநெல்லி - அரிநெல்லி    
அருநேரளிச்செடி - பிடங்குநாரி  
அருப்பச்செடி - தொடரிச்செடி  
அருப்பலத்தரிசி - புல்லரிசி   
அருப்பலமரம் - அனிச்சைமரம்  
அருமருந்துக்கொடி - பெருமருந்துக்கொடி    
அருளகஞ்செடி - எருக்கஞ்செடி 
அருளருசிமரம் - வெட்பாலை  
அருளரோசிகச்செடி - புல்லூரி    
அருளவமரம் - பெருமரம்    
அருளாசியிலை - வேப்பிலை  
அருளாதிமரம் - குடசப்பாலை  
அருளாதோதியச்செடி - புளிப்பிலந்தைச்செடி  
அருளாபுக்கொடி - சாரணை  
அருளாபோகிகச்செடி - புளிப்புக்கொடி, மாதுளைச்செடி
அருளுறுதிமரம் - வேப்பமரம்        
அருளோதியக்கொடி - புளிப்புக்கொடி முந்திரி 
அருள்மரம் - இரும்பகமரம்  
அருள்விருட்சம் - பஞ்சதரு       
அரேசகானச்செடி - கரணை
அரேசானகமரம் - புளிப்புக்கொழுமீச்சைமரம்
அரேசிகமரம் - வாழைமரம்
அரேசோனிதமரம் - புளிப்புநவ்வல்
அரேணுகப்பூ - வால்மிளகு
அரேணுகப்போருகமரம் - புளிப்புமாதுளை மரம்
அரேணுகம் - வால்மிளகு
அரைக்சாசப்புல் - பூனைப்புல்
அரைக்கீரை - அறுகீரை
அரோசகாரி - தூம்புரவாலி
அரோட்டுமா - கிழங்கின்மா
அலகம் - ஆனைத்திப்பிலி
அலகாபிதக்கொடி - புளிப்புமுந்திரிக்கொடி
அலகுசோலிப்புல் - அறுகம்புல்
அலகுப்பீஷன் - பூனைப்பீஷன்
அலகுமரம் - மகிழமரம்
அலகுமாரகப்புல் - பூனைப்புல்
அலகைக்கொம்மட்டிக்கொடி - பேய்க்கும்மட்டிக்கொடி
அலகைப்புடல் - பேய்ப்புடல்
அலக்கைநெல்லி - கீழ்காய்நெல்லி
அலங்கமரம் - தாழைமரம்
அலங்காரச்செம்பரத்தை - பெருஞ்செம்பரத்தைச்செடி
அலங்காரம் - வெடிகாரம்
அலங்கைச்செடி - துளசிச்செடி
அலசத்துவம் - சோம்பு
அலத்தகச்செடி - செம்பருத்தி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal