சித்த வைத்திய அகராதி 8101 - 8150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8101 - 8150 மூலிகைச் சரக்குகள்


தீர்க்கபிப்பூடு - பாம்புக்கொல்லிப்பூடு
தீர்க்கமூலக்கொடி - முடக்கொத்தான்கொடி
தீர்க்கமேதிவிருட்சம் - கனையெருமைவிருட்சம்
தீர்க்கலோகிதப் புல் - தர்ப்பைப்புல்
தீர்ககலறுகு - யானையறுகு
தீர்க்கவிருக்கம் - பெருமரம்
தீவிரகந்தம் - துளசிச்செடி
தீனிப்பைக்கு வலுவைக் குறைக்குமூலிகைகள் - கிழங்குகள், இலந்தைப்
பழம், ஆளிவிரை, வெண்பூசனிக்காய்விரை, தேங்காய்ப்பால்,
எள்ளு, வடிகஞ்சி, வெந்நீர், இனிப்புப்பலகாரங்கள்
தீனிப்பைக்கு வலுவைக் கொடுக்குமூலிகைகள் - நெல்லிக்காய்,
மாதுளம்விரை, லவங்கம், ரோஜாப்பூ, ஏலக்காய், மிளகு
தீன்புச்செடி - சங்சங்குப்பிசெடி
துகிலின்பீசவிதை - பருத்திவிதை
துகுற்சிதச்செடி - நறுவீழிச்செடி
துசகக்கொடி - கொம்மட்டிக்கொடி
துசகதாதிதச்செடி - குடைமல்லிகைச்செடி
துசகமாதளை - கொம்மட்டிமாதளைச் செடி
துசக்கார மூலி - சிறியாணங்கைச்செடி
துசம் - குங்கிலியம்
துசாகதக்கொடி - குமிட்டிக்காய்க்கொடி
துசாகதீதமரம் - மாதளைமரம்
துசிசாலக்கொடி - பிரண்டைக்கொடி
துச்சிதச்செடி - ஆமணக்குச்செடி
துச்சிமமரம் - மயிர்க் கொன்னைமரம்
துடக்கறுப்பான்கொடி - முடக்கத்தான்கொடி
துடங்கணம் - வெண்காரம்
துடரிக்கொடி - தொடரிக்கொடி
துடர்க்கச்செடி - நரிவழுக்கைச்செடி
துடிகாச்செடி - தும்பைச்செடி
துடிகாதீதக்கள்ளி - குதிரைச்செவிக்கள்ளி
துடிச்சேவிகச்செடி - இசங்குச்செடி
துடிச்சோபிதமரம் - அகில்மரம்
துடிமாலிகக்கொடி - கொடியாவரைக்கொடி
துடியாஞ்சிகச்செடி - இசங்குச்செடி
துடியிகமரம் - நவரைவாழைமரம்
துடைக்கனமரம் - மூங்கில்மரம்
துடைச்சவச்செடி - எருக்குச்செடி
துணவுமரம் - தணக்குமரம்
துண்டிகை - கொப்பூழ்
துத்தகைக்கொடி - நாய்ப்பாகற்கொடி
துத்தநாகப்புல் - பெருநாதம்
துத்தபாஷாணம் - இரசிதபாஷாணம்
துத்தபேனச்செடி - நுரையிண்டஞ்செடி
துத்தமப்புல் - நாணற்புல்
துத்தமப்பூவிதம் - கொடியூமத்தை
துத்தமனாப்புல் - முயற்புல்
துத்திச்செடி - மஞ்சட்துத்திச்செடி
துத்திநீர் - சிறுநீர்
துத்தூரச்செடி - ஊமத்தைச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal