சித்த வைத்திய அகராதி 8151 - 8200 மூலிகைச் சரக்குகள்
துந்தி - வயிறு - அடிவயிறு
துப்பா - தேன் - கொம்புத்தேன்
துப்பிரதாரிக்கொடி - நீர்ப்பாசிக்கொடி
தும்பகச்செடி - தும்பைச்செடி
தும்பசிச்சாரம் - தும்பராஷ்டகம்
தும்பரமரம் - அத்திமரம்
தும்பரமலினிக்கொடி - குதிரைக்குளம்படிக்கொடி
தும்பரமல்லிகை - அந்திமல்லிகைச்செடி
தும்பராக்கோதுமை - காட்டுக்கோதுமை
தும்பராஷ்டகம் - பேரரத்தை
தும்பராஞ்சிகைக்செடி - எருமுட்டைப்பீநாறிச்செடி
தும்பலிச்செடி - சீனத்துச்செடி
தும்பாகிகமரம் - ஆலமரம்
தும்பாலைக்கொடி - சுரைக்கொடி
தும்பாவகக்கொட்டை - காப்பிக்கொட்டை
தும்பிச்செடி - சிறுதும்பைச்செடி
தும்பிலிமுத்து - நீர்வெட்டிமுத்து
தும்புக்கொடி - கொத்தான்கொடி
தும்புசத்தட்டை - கரும்புத்தட்டை
தும்புசவேம்பு - சருக்கரைவேம்புமரம்
தும்புராசிகக்கொடி - சவுரிகொடி
தும்புராஷ்டகம் - பெருஞ்சித்தரத்தை
தும்புருமரம் - வெண்சூலிமரம்
தும்புலாமரம் - விஷத்தும்புலாமரம்
தும்புலிப்பாகு - சருக்கரை
தும்பைச்செடி - பெருந்தும்பைச்செடி
தும்மட்டிகாச் செடி - கடலாமணக்குச்செடி
தும்மட்டிக்கொடி - சிறுகும்மட்டிக்கொடி
தும்முகாம்புல் - காவட்டம்புல்
தும்முட்டிகமரம் - பேரிச்சமரம்
துயிலிக்கீரை - தொயிலிக்கீரை
துயில்காணாச்செடி - நெட்டி
துய்த்தல் - சாப்பிடல், உண்ணல்
துய்யான் - வெள்ளி
துரகதப்பூரக்கொடி - கற்பூரவெற்றிலைக்கொடி
துரகதமூலச்செடி - நீர்முள்ளிச்செடி
துரங்கப்பேரரிசி - குதிரை வாலியரிசி
துரங்கியவரிசி - கோதுமையரிசி
துரமிக்கொடி - தூதுளைக்கொடி
துரவிச்செடி - சேம்புச்செடி
துராயிலைப்பூண்டு - திராயிலைப்பூண்டு
துராயூகரிசி - பச்சரிசி
துராரோகமரம் - பனைமரம்
துராலகச்செடி - சன்னிநாயகச்செடி
துராலபச்செடி - சிறுகாஞ்சொறிச்செடி
துராலகமாதிச்செடி - செந்தொட்டிச்செடி
துரிஞ்சல்மரம் - உசில்மரம்
துரியத்தானக்கொடி - நாபிக்கொடி, கொப்பூழ்கொடி
துருக்கம் - குந்திரிக்கம்
துருக்கரமரம் - கஸ்தூரிநாறிமரம்
சித்த வைத்திய அகராதி 8151 - 8200 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal