சித்த வைத்திய அகராதி 8201 - 8250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8201 - 8250 மூலிகைச் சரக்குகள்


துருசுக்குத்தேவி - மருக்களஞ்செடி
துருசுக்குப்புருடன் - அயம்
துருஞ்சில்மரம் - உசில்மரம்
துருத்தூரச்செடி - ஊமத்தைச்செடி
துருபவருணிச்செடி - காட்டாமணக்குச்செடி
துருபாரிதமரம் - சித்தகத்திமரம்
துருமசிரேட்டமரம் - பளைமரம்
துருமநகக்கொடி - புலிதுடக்கிக்கொடி
துருமம் - குங்குமம்
துருமவருணிச்செடி - காட்டாமணக்குச்செடி
துருமேகமரம் - பனைமரம்
துருமேகம்போக்கி - சிகரெட்டு
துருமோற்பலமரம் - கோங்குமரம்
துரும்புநீர் - கற்றாழைநீர்
துருவாதிச்செடி - காட்டாமணக்குச்செடி
துருவாதினிப்பூச் செடி - சிமிக்கிமல்லிகைச்செடி
துருவாவேலம் - சிற்றேலம்
துரோணகைச்செடி - வெண்ணொச்சிச்செடி
துரோணச்செடி - தும்பைச்செடி
துரோணிகாமுத்து - கொட்டைமுத்து
துரோணிகைவிரை - ஆவிரை
துரோணிதமரம் - தாழைமரம்
துர்த்தூகிகச்செடி - ஊமத்தைச்செடி
துலாந்திரம்- அந்தரமாய்க்கட்டுவது
துலாப்படிகப்பூடு - பனிதாங்கிப்பூடு
தூலியாசுனமரம் - செம்முருங்கைமரம்
துலேயக்கொடி - நீர்ச்சுண்டிக்கொடி
துவரைச்செடி - முதிரைச்செடி
துவரைச்சேபிதமரம் - கருந்துவரை மரம்
துவரைமரம் - வெண்துவரை மரம்
துவரைமல்லிச்செடி - செம்மல்லிகைச்செடி
துவர்க்காம்பு - கத்தைக்காம்பு
துவர்க்காய்மரம் - கமுகுமரம்
துவகைச்செடி - வட்டத்திருப்பிச் செடி
துவாரபிண்டி - வாசற்படி
துவாரம் - வாசல், தொண்டி
துவிகாசிகவரத்தை - சித்தரத்தை
துவிகாயாசிமரம் - செம்முருங்கைமரம்
துவிசபதிச்செடி - சந்திரகாந்திச்செடி
துவிபுத்துக்கிழங்கு - தண்ணீர்விட்டான்கிழங்கு
துவிமுகக்காளான் - புற்றுக்காளான்
துவைசிச்செடி - துளசிச்செடி
துழாய்ச்செடி - திருத்துழாய்ச்செடி
துளக்காவணமரம் - பூவந்திமரம்
துளசிச்செடி - வெண்துளசிக்செடி
துளசிச்சேபிதம் - துளசிமூலம்
துளபம் - துளசி
துளம்பிக்கொடி - காத்தொட்டிக்கொடி
துளவிகம் - திப்பிலி
துளவிகாதிதம் - சாம்பிராணி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal