சித்த வைத்திய அகராதி 8251 - 8300 மூலிகைச் சரக்குகள்
துளவுச்செடி - துளசிச்செடி
துளாய்ச்செடி - மூங்கில்மரம்
துள்ளியச்செடி - பெரியாணங்கைச்செடி
துறட்டிகச்செடி - சூரஞ்செடி
துறட்டிகிச்செடி - சூரஞ்செடி
துறட்டிநீர் - கங்கைநீர்
துற்பரிசச்செடி - சிறுகாஞ்சொறிச்செடி
துற்பூதிகச்செடி - பெருந்தக்காளிச்செடி
தூங்கமுட்டுக்கிழங்கு - கோரைக்கிழங்கு
தூங்கமெல்லிச்செடி - பேராமல்லிச்செடி
தூசிகக்கீரை - புளியாரைக்கீரை
தூசிகக்குமிட்டி - நற்குமிட்டிக்கொடி
தூசிகக்கொடி - புளியாரைகொடி
தூசிகாச்செடி - சிமிட்டிச்செடி
தூசிப்புக்கிழங்கு - தண்ணீர்விட்டான் கிழங்கு
தூட்டி - சீலை, சேலை, துயில், புடவை
தூட்டிகச்செடி - தும்பைச்செடி
தூணிக்கதம்பமரம் - வெண்கடம்புமரம்
தூணியாங்கமரம் - அத்திமரம்
தூணிமுள்ளிச்செடி - பைசாசமுள்ளிச்செடி
தூண்டிக்கிழங்கு - நாபிக்கிழங்க
தூதபங்கனி - சதைமாமிசம்
தூதாயிப்பூண்டு - கீரிப்பூண்டு
தூதாயிமரம் - பொறித்தேற்றாமரம்
தூதுளைக்கொடி - மந்தைப்பெருச்சாளிக் கொடி
தூத்தன்மரம் - மூங்கில்மரம்
தூபம் - சாம்பிராணி
தூபாக்கொடி - பொற்சீந்திற்கொடி
தூமக்கிழங்கு - புளிநறளைக்கிழங்கு
தூமயோனிச்செடி - மேகநாதமூலிச்செடி
தூம்பற்கொடி - சுரைக்கொடி
தூம்பாசிதமரம் - சாப்பிராவிதை மரம்
தூம்பாச்செடி - தும்பைச்செடி
தூம்பிரபாஷாணம் - துத்தபாஷாணம்
தூம்புரவாலிச்செடி - செந்துருக்கன்செடி
தூம்புரவேதிமரம் - முண்டகவிருட்சம்
தூம்புருமாதிதம் - சாம்பிராணி
தூம்புருவேதை - புகைவேதை
தூய்ந்தகக்கொட்டை - உருண்டைக்காப்பிக் கொட்டை
தூரேத்திப்பபூடு - கம்பந்திராய்ப்பூடு
தூரோணகிச்செடி - கௌதும்பைச்செடி
தூரோதகம் - சித்தொடுவைசாரம்
தூரோதகிச்செடி - ஊசிமுல்லைச்செடி
தூர்த்தகச்செடி - ஊமத்தைசெடி
தூர்த்தயக்கொடி - ஊதா அல்லிக்கொடி
தூர்மச்செடி - தேட்கொடுக்குச்செடி
தூர்வமரம் - மீனைமரம்
தூர்வைப்புல் - அறுகம்புல்
தூர்வோகமரம் - ஒட்டுப்பலாமரம்
தூலகச்செடி - நீர்முள்ளிச்செடி
சித்த வைத்திய அகராதி 8251 - 8300 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

