சித்த வைத்திய அகராதி 8351 - 8400 மூலிகைச் சரக்குகள்
தேகணி - மஞ்சள்
தேகராஜிகச்செடி - கரிப்பான்செடி
தேகிகச்செடி - புல்லூரிச்செடி
தேக்கிவிமரம் - மொச்சிமரம்
தேக்குமரம் - பெருந்தேக்குமரம்
தேக்கோமகச்செடி - பொற்றலைக்கரிப்பான் செடி
தேங்காய் - முக்கண்ணன்காய்
தேங்காய்ப்பூண்டு - அரிசிப்பூண்டு
தேங்காலிகமரம் - சருக்கரைக்கொழுமிச்சைமரம்
தேங்கிட்டிச்செடி - தேட்கொடுக்குச்செடி
தேசகிமரம் - மூங்கில்மரம்
தேசணி - மஞ்சள்
தேசிக்காய் - எலுமிச்சங்காய்
தேசிப்பால் - எலுமிச்சம்பழரசம்
தேசிமரம் - எலுமிச்சைமரம்
தேசோமரம் - நெல்லிமரம்
தேட்கொடுக்குச்செடி - சிறுதேட்கொடுக்குச்செடி
தேட்டுக்கனிகிகம் - தேசாவரம்
தேத்தாமரம் - தேற்றாமரம்
தேநசமரம் - மூங்கில்மரம்
தேமாமரம் - இனிப்புமாமரம்
தேம்பாகமரம் - தேன் தொடைமரம்
தேயிலைச்செடி - கொழுந்திலைச்செடி
தேயுசாரம் - தேசாவரம்
தேர்ப்பூண்டு - காரம், பூநீறு
தேலிக்கோசனமரம் - நரிக்கொன்னைமரம்
தேவகந்தகம் - குங்கிலியம்
தேவகெந்திதம் - சாம்பிராணி
தேவதரு - கற்பகத்தரு
தேவதாமிகக்கீரை - செம்புளிச்சக்கீரைச்செடி
தேவதாமுகிக்கிழங்கு - சருக்கரைவள்ளிக் கிழங்க
தேவதாரிமரம் - தேவதாருமரம்
தேவதாருமரம் - வண்டுகொல்லிமரம்
தேவதாவிக்காய் - சாதிக்காய்
தேவதாளிசக்கொடி - பேய்ப்பீhக்குக்கொடி
தேவதூபம் - சாம்பிராணி
தேவபூஜைப்பூ - செங்கழுநீர்ப்பூ
தேவபூதிமரம் - தில்லைமரம்
தேவமரம் - அனிச்சைமரம்
தேவமாதிக்கற்றாழை - நாகபடக்கற்றாழை
தேவவகைச்செடி - அடுக்குமல்லிகைச்செடி
தேவலிமரம் - புன்னைமரம்
தேவவிருட்சம் - கற்பகவிருட்சம்
தேவாங்கோலச்செடி - நாறாகரந்தைச்செடி
தேவாபேட்சையிலை - வெற்றிலை
தேவாமுதம் - சுழிமுனையமுதம்
தேவிகந்தம் - கெந்தகம்
தேவிகமரம் - பூம்பாதிரிமரம்
தேவிசாரணை - சத்திச்சாரணை
தேவிமூலச்செடி - சிறுபூளைச்செடி
சித்த வைத்திய அகராதி 8351 - 8400 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal