சித்த வைத்திய அகராதி 8551 - 8600 மூலிகைச் சரக்குகள்
நட்சத்திரம் - பூரம்
நட்சமாமரம் - கூமாமரம்
நட்சைமரம் - தணக்குமரம்
நட்பத்திரிகைச்செடி - சேம்பச்செடி
நணுகவமரம் - மயிலைமரம்
நதீசக்கொடி - தாமரைக்கொடி
நரிவரிச்செடி - குதம்பைச்செடி
நத்தகாமரம் - புங்குமரம்
நத்தச்சூரிச்செடி - குளிமீட்டான்செடி
நத்தப்பிரகிச்செடி - எருக்குச்செடி
நத்தப்பூரிதவேர் - சிற்றரத்தை
நத்தமாதிதச்செடி - சின்னசிவப்பம்மான் பச்சரிசிச் செடி
நத்தமாலகிமரம் - கொடிப்புங்குமரம்
நத்தலைச்செடி - பாவட்டைச்செடி
நத்தவீராசி - இரத்தவீராசி
நத்திரி முட்டை - கோழிமுட்டை
நத்தைக்கூடு - நத்தரங்கூடு
நத்தைச்சதை - நத்தைமாமிசம்
நத்தைச்சுண்டிச்செடி - நத்தைச்சூரிச்செடி
நத்தைச்சூரிவிரை - குளிமீட்டான்விரை
நந்தாமணிக்கொடி - உத்தாமணிக்கொடி
நந்திபண்ணை - வெடியுப்பு
நந்திபத்திரிச்செடி - நந்தியாவட்டை
நந்திபாகமூலி - ஈசுரமூலி
நந்திப்பூசணிக்கொடி - சாம்பற்பூசணிக் கொடி
நந்திமுகியரிசி - கோதுமையரிசி
நந்தியாவட்டைச்செடி - தேவதாவட்டைச்செடி
நந்தியாவர்த்தச்செடி - நந்தியாவட்டைச்செடி
நந்திரகாவேம்பு - சிவனார்வேம்புச்செடி
நந்திரசின்னி - சிறுசின்னி
நந்திவிருட்சம் - கற்பகவிருட்சம்
நந்தைக்கொடி - முடக்கொத்தான்கொடி
நபசாரியச்செடி - மருவுச்செடி
நமக்காரிக்கொடி - வரற்சுண்டிக்கொடி
நமவாரிதி தொடை - ஆடதொடை
நம்புலிமரம் - நாவல்மரம்
நயமாலி - மனோசிலை
நயனோபாந்தம் - கடைக்கண்
நரகனாதிச்செடி - தேட்கொடுக்குச்செடி
நரகாலிகப்புல் - சம்பைப்புல்
நரந்தகிமரம் - நாரத்தைமரம்
நரம்புக்காய் - முருங்கக்காய்
நரளிக்கடலை - வேர்க்கடலை
நரளைக்கடுகு - சிறுகடுகு
நரளைக்கொடி - சிறுநரளைக்கொடி
நரிக்கொன்றைமரம் - சிறு கொன்றைமரம்
நரிச்சின்னிச்செடி - சிறுசின்னிச்செடி
நரிச்சீரகம் - சிறுசீரகம்
நரித்தோற்பட்டை - நாவற்பட்டை
நரிநவ்வல் - சிறுநவ்வல்
சித்த வைத்திய அகராதி 8551 - 8600 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal