சித்த வைத்திய அகராதி 8651 - 8700 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8651 - 8700 மூலிகைச் சரக்குகள்


நவகசாரக்கொடி - சாரணைகொடி
நவஞ்சச்செடி - அசமதாகச்செடி
நவதாளகமரம் - சருக்கரைப்புளிமரம்
நவநீதம் - வெண்ணெய்
நவபல்லவச்செடி - சிலையாமணக்குச்செடி
நவரைவாழை - மகரவாழை
நவரோதயகற்கண்டு - சீனிக்கற்கண்டு
நவலோகம் - தங்கம், செம்பு, வெள்ளி, வங்கம், கருவங்கம்,
நாகம், அயம், வெங்கலம், பித்தளை
நவுகாமரம் - நவுகுமரம்
நவுகுமரம் - கருமுருகிமரம்
நவூரியமரம் - செஞ்சித்தகத்தி
நவ்வல்மரம் - இனிப்புநவ்வல்மரம்
நவ்வூகிதக்கற்றாழை - வரிக்கற்றாழை
நளகிக்கொடி - தாமரைக்கொடி
நளகுகாவவரை - சீனிக்கொத்தவரைச்செடி
நளத்தமாஞ்சில் - சடாமாஞ்சில்
நளிர் - நண்டு - தலையிலான்
நளினப்பூ - தாமரைப்பூ
நளினவிருட்சம் - முண்டகவிருட்சம்
நறவிகாமரம் - அனிச்சமரம்
நறவு - தேன் - அமுதம்
நறவுசாரம் - குங்குமம்
நறளை - பெருநறளை
நறுக்குமூலம் - கண்டத்திப்பிலி
நறுங்கரந்தை - நாறுகரந்தைசெடி
நறுந்தாளிக்கொடி - தாளிக்கொடி
நறுந்திகாப்புல் - சுக்குநாறிப்புல்
நறுந்தேன் - கொம்புத்தேன்
நறுமகாசீரம் - நச்சீரகம்
நறுமணத்தக்காளிச்செடி - மணத்தக்காளிச்செடி
நறுமணம் - நல்லவாசனை
நறுமுருங்கை - முருங்கைமரம்
நறுமுலிகாமரம் - சுரபுன்னைமரம்
நறுமுதிரச்செடி - வனமிரட்டிசெடி
நறுமுன்னைமரம் - முன்னைமரம்
நறுவிளிமரம் - விருசமரம்
நறைமாறிமரம் - கருநெல்லிமரம்
நற்சீரகம் - கறிச்சீரகம்
நற்சேவகன்கிழங்கு - கோடங்கிழங்கு
நற்பலாமரம் - வேர்ப்பலா
நற்பிரியம் - பற்படாகம்
நற்பீடகமரம் - வாதாங்கொட்டைமரம்
நற்பீர்க்கங்கொடி - பீர்க்கங்கொடி
நற்றுளசி - சிவதுளசி
நற்றுளிப்பிசின் - அத்திப்பிசின்
நனந்தமரம் - புங்குமரம்
நனைந்தவக்கொடி - சிறுகட்டுக் கொடி
நண்பனாச்செடி - சணற்செடி
நன்மாலவமரம் - விடமருதுமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal