சித்த வைத்திய அகராதி 8851 - 8900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8851 - 8900 மூலிகைச் சரக்குகள்


நானகுலிமரம் - முன்னைமரம்
நானாங்கள்ளி - இலைக்கள்ளி
நானாவிதச்செடி - வேப்பிலைநங்கைச்செடி
நான்முகப்புல் - சதுரப்பட்டைப்புல்
நான்முகன்தேவி - மனோசிலை
நிகடை - உருக்குங்குகை
நிகண்டகச்செடி - கடலைச்செடி
நிகாசகக்கொடி - வெள்ளாம்பற்கொடி
நிகாநயச்செடி - சந்திரகாந்திச்செடி
நிகாவரிச்செடி - பிரமிச்செடி
நிகுஞ்சரப்புல் - சுக்குநாறிப்புல்
நிகும்பவாளம் - நேர்வாளம்
நிகேசரப்புல் - சமபங்கிப்புல்
நிக்குரோதச்செடி - காட்டாமணக்குச்செடி
நிசாகசமரம் - மகிழமரம்
நிசாகசிக்கொடி - தாமரைக்கொடி
நிசாகரககீரை - கோழிக்கீரை
நிசாடுகம் - மஞ்சள்
நிசாபதி - கற்பூரம்
நிசதபிகமஞ்சள் - மரமஞ்சள்
நிசாபிகாரிப்பூ - சிற்றாமரைப்பூ
நிசாபுட்பம் - செவ்வாம்பற்பூ
நிசாமணிச்செடி - சந்திரகாந்திச்செடி
நிசிகம் - மஞ்சள்
நிசிதாவிமரம் - நீர்க்கடம்புமரம்
நிசோதகச்செடி - செஞ்சிவதைச்செடி
நிச்சடக்கொடி - காளிக்கொடி
நிச்சதக்கீரை - செடிக்காசரைக்ரை
நிச்சியப்பூடு - வெள்ளைப்பூடு
நிட்பவப்பயறு - மொச்சைபயறு
நிணச்சாயமரம் - சாயாவிருட்சம்
நிக்காரிச்செடி - நீர்முள்ளிச்செடி
நிதத்துரப்புல் - சோனைப்புல்
நிதிந்தக்கொடி - கண்டங்கத்திரிக்கொடி
நிதியவமரம் - சிறுதேக்குமரம்
நித்தக்கத்திரிச்செடி - தினக்கத்திரிச்செடி
நித்தியகல்யாணிச்செடி - வாடாமல்லிகைச்செடி
நித்திரகாசச்செடி - நொச்சிசெடி
நித்திரகாரிச்செடி - கஞ்சாச்செடி
நித்திரவரிக்கொடி - கண்டங்கத்திரிக்கொடி
நித்திராவிச்செடி - ஊமத்தைச்செடி
நிம்பதேசிக்கொடி - முடக்கத்தான்கொடி
நிம்பப்பட்டை - வேப்பம்பட்டை
நிம்பப்பழம் - எலுமிச்சம்பழம்
நிம்பப்பாசி - வேப்பம்பாசி
நிம்பப்பாசிகச்சாறு - எலுமிச்சம்பழச்சாறு
நிம்பப்பூ - வேப்பம்பூ
நிம்பமரம் - வேப்பமரம்
நிம்பமேற்புல்லுருவி - வேம்பின்மேற்புல்லுருவி
நிம்பமோலிப்பட்டை - வேப்பம்பட்டை

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal